அபிரியோவின் கிளவுட் சேவையை வாங்குகிறது விப்ரோ...!!!

கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது அபிரியோ நிறுவனம். இந்த  நிறுவனத்திற்கு, ஜெய்பூர், சான்பிரான்ஸிஸ்கோ, டப்ளின், லண்டன் மற்றும் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  நிறுவனத்தை  பொறுத்தவரை, உலகம் முழுவதும்  சுமார் 1,250 பணியாளர்கள் உள்ளதாக  தெரிகிறது.  கோக கோலா, பேஸ்புக், சோனி பிளே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாவர்  என்பது   குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது, .நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ, கிளவுட் சேவைகளை வழங்கும் நிறுவனமான அபிரியோவை ரூ.3,340 கோடிக்கு வாங்க  முடிவு  செய்துள்ளதாக  செய்திகள் வெளியாகி  உள்ளது.

ஒரு வேளை இந்த  நிறுவனம்  விப்ரோவிடம்  வந்து விட்டால்,  டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கியமான மாற்றம் நிகழும் என தெரிகிறது.