Gold rate today June 15 2022: Gold rate toda chennai: gold rate today : சென்னையில்(chennai)ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இன்று  இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாயும், சவரணுக்கு 200 ரூபாயும் வீழ்ச்சி அடைந்தது.

Gold rate in Chennai: gold rate today: சென்னையில் (chennai)ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாயும், சவரணுக்கு 200 ரூபாயும் வீழ்ச்சி அடைந்தது.

கச்சா எண்ணெய் விலை குறைவு, அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி இன்று இரவு வட்டிவீதத்தை 50 முதல் 70 புள்ளிகள் வரை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை தங்கத்தைவிட எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் பத்திரங்களில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது

 சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,740க்கும், சவரண் ரூ.37,920க்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 சரிந்து ரூ.4,715 ஆகவும், சவரணுக்கு, ரூ. 200 குறைந்து, ரூ.37 ஆயிரத்து720க்கும் விற்பனையாகிறது. 

தங்கத்தின் விலை கடந்த 5 தேதி முதல் சவரண் ரூ.38 ஆயிரத்துக்கு குறையாமல் இருந்தநிலையில் கடந்த இரு நாட்களாக குறைந்துவருகிறது. அமெரிக்கச் சந்தையில் கடன் பத்திரங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு சரிந்துள்ளது என்பதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக சரிவதாலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

வெள்ளி விலை: 
வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.66 க்கும் ஒரு கிலோ ரூ.66000க்கு விற்பனையாகிறது.