Central Bank of India: RBI:   பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தனது கிளைகளில் 13சதவீத்தை அதாவது 600 கிளைகளை மூட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தனது கிளைகளில் 13சதவீத்தை அதாவது 600 கிளைகளை மூட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

600 கிளைகள்

வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 கிளைகளை மூட இருப்பதாகவும், பல ஆண்டுகளாக நிலவிவரும் நிதி அழுத்தத்திலிருந்து தப்பிக்கவும் வங்கியின் நிதி நிலைமையை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தனது 600 கிளைகளை மூடலாம் அல்லது நஷ்டமடைந்த வங்கி கிளைகளை இணைக்கலாம் இந்த நடவடிக்கை 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இருக்கும் எனத் தெரிகிற

நஷ்டம் 

இதுகுறித்து பெயர் வெளியிடவிரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிதி நிலைமை மோசமடைந்துவிட்டது. இதனால் நிதி நிலைமையை வலுப்படுத்த உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வங்கிக்கு சொந்தமான சில நிலங்களும் விற்கப்பட உள்ளது. ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான சென்ட்ரல் பேங்க் இந்தியாவுக்கு நாடு முழுவதும் 4,594 கிளைகள் உள்ளன” எனத் தெரிவித்தார்

பிசிஏ நடவடிக்கை

இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டு ரிசர்வ் வங்கி பிசிஏ நடவடிக்கையைக் கொண்டு வந்தது. அதாவது நஷ்டமடைந்த வங்கிகள், வாராக்கடன் அதிகமிருக்கும் வங்கிகள் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகும். இதில் பெரும்பாலான வங்கிகள் தங்களின் நிதிநிலைமையை வலுப்படுத்திவிட்டன, ஆனால் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மட்டும் வலுப்படுத்தவில்லை. 

2017ம் ஆண்டிலிருந்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி மோசமாகவே செயல்பட்டு லாபம் குறைவாக ஈட்டி வருகிறது. மேலும் ஊழியர்களையும் சிறப்பாகவும், திறமையைாகவும் பயன்படுத்துவதிலிருந்து தவறிவிட்டது என்று கடந்த மே 4ம் தேதி வெளியிட்டஅ றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் பிசிஏ நடவடிக்கைக்குள் இருந்ததால், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியால் கடன் கொடுப்பது மற்றும் டெபாசிட் செய்வதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. கிளைகளை விரிவுபடுத்துவதிலும், சிக்கல் இருந்தன.