Nse scam: கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லியில் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லியில் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சித்ராவை மருத்துவப் பரிசோதனைக்கு கொண்டு சென்று இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

கோ-லொகேஷன் ஊழல்
என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் இருந்தபோது, என்எஸ்இ சர்வர்கள் வைக்கப்பட்டிருக்கும் அருகே சில குறிப்பிட்ட பங்கு நிறுவநங்கள், தரகர்களின் சர்வர்களை வைத்து பங்குவர்த்தக தகவல்களை விரைவாக பகிர்ந்த கொள்ள உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் சிபிஐ கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது
ஆனந்த் சுப்பிரமணியன் கைது
இந்த வழக்கில் சில பங்குவர்த்தகர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த மாதம் 25ம் தேதி சித்ரா ராமகிருஷ்ணன் ஆலோசகராக இருந்த ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைதுசெய்யாமல் இருக்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

விசாரணைக்கு ஒத்துழைப்பில்லை
இதையடுத்து, எந்தநேரமும் சிபிஐ அதிகாரிகளால் சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள், சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் மும்பையில் உள்ள சித்ராவின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு, 3 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகளுக்கு சித்ரா ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, சித்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன?
சிபிஐ விசாரணையில் எந்த தகவலையும் சித்ரா கூறாததையடுத்து, மத்திய தடவியல் அறிவியல் ஆய்வகத்திலிருந்து மூத்த உளவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு அவரின் உதவியின் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், எந்த விவரத்தையும்சித்ரா கூறாததையடுத்து, அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்த கோலொகேஷன் வழக்குக் குறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ கோ-லோகேஷன் வழக்கு என்பது பெரும் கொள்கை முடிவுபோல் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் என்எஸ்இஅமைப்பின் நிர்வாக இயக்குநர், சிஇஓ, மற்றும் மூத்த அதிகாரிகள் பலருக்கு இதில் முக்கிய் பங்கு உண்டு. சில குறிப்பிட்டபங்கு நிறுவனத் தரகர்கள், என்எஸ்இ சர்வலிருந்து பங்கு தர்கர்களின் சர்வர்களுக்கு செல்வதற்கு முன்பாக சில வினாடிகளுக்கு முன்பே அவர்களுக்குமட்டும் பங்குகளின் விலை குறித்த பட்டியல் செல்லுமாறு அவர்களின் சர்வர்கள் அருகே வைக்கப்பட்டன.இதனால் ஏராளமானோர்ஆதாயம் அடைந்தனர். குறிப்பிட்ட சில பங்கு தரகர்கள், ஓபிசி செக்யூரிட்டீஸ் நிறுவனம் ஆகியவை இதில் குற்றம்சாட்டப்படுகிறது.
சித்ரா ராமகிருஷ்ணன் 2013ம் ஆண்டு என்எஸ்இ சிஇஓவாக பொறுப்பேற்றபின்புதான் இந்த கோலொகேஷன் ஊழல் நடந்தது. ” எனத் தெரிவித்தனர்
