Asianet News TamilAsianet News Tamil

canara bank: depost rate: repo rate: அலர்ட்! கனரா வங்கி டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தியது: முழுவிவரம் இதோ

canara bank: depost rate: repo rate: ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து கனரா வங்கி, வைப்புத் தொகைக்கான வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளது.

canara bank: depost rate: repo rate:  Canara Bank Hikes Interest Rates on Fixed Deposits
Author
Mumbai, First Published May 14, 2022, 1:42 PM IST

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து கனரா வங்கி, வைப்புத் தொகைக்கான வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளது. 

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த மார்ச் மாதம் 7 சதவீதமாக பணவீக்கம் உயர்ந்தது, ஏப்ரலில் 7.80 சதவீதமாக அதிகரித்தது. இதையடுத்து கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கிஅறிவித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டியையும், வைப்புத் தொகைக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன

canara bank: depost rate: repo rate:  Canara Bank Hikes Interest Rates on Fixed Deposits

இதில் கனரா வங்கி, வைப்புத் தொகைக்கான வட்டியை 10 முதல் 25 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. அதாவது ரூ.2 கோடிக்கு குறைவாக 46 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வைப்புத்தொகையாக வைப்போருக்கு இந்த வட்டிவீதம் பொருந்தும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.  கனரா வங்கி திருத்தி அமைத்துள்ள வட்டி வீதம் கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மூத்த குடிமக்கள் ரூ2 கோடிக்கும் குறைவாக, 180 நாட்கள் மற்றும் அதற்கு மேல் வைப்புத் தொகை வைத்திருந்தால், அவர்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படும். 

திருத்தி அமைக்கப்பட்ட வட்டிவீதம் என்பது ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் சிங்கிள் டெபாசிட்டாக வைப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.5 லட்சத்துக்கு குறைவாக டெபாசிட் செய்பவர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் வைப்புத்தொகை செய்திருந்தால்தான் வட்டி கிடைக்கும்.

canara bank: depost rate: repo rate:  Canara Bank Hikes Interest Rates on Fixed Deposits

வட்டிவீத விவரங்கள்

1.    7 நாட்கள் முதல் 45 நாட்கள்- சாதாரண மக்களுக்கு 2.90 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 2.90%
2.    46 மதுல் 90 நாட்கள் வரை: சாதாரண மக்களுக்கு 4%, மூத்த குடிமக்களுக்கு 4%
3.    91 முதல் 179 நாட்கள் வரை: சாதாரண மக்களுக்கு 4.05%, மூத்த குடிமக்களுக்கு 4.05%
4.    180 முதல் 269 நாட்கள் வரை: வாடிக்கையாளர்களுக்கு 4.50%, மூத்த குடிமக்களுக்கு 5%
5.    270 முதல் ஒர் ஆண்டுக்கு குறைவாக: 4.55%, மூத்த குடிமக்களுக்கு 5.05%
6.    ஓர் ஆண்டு டெபாசிட்: 5.30%வட்டி, மூத்த குடிமக்களுக்கு 5.80% வட்டி
7.    ஓர் ஆண்டுக்கு அதிகம், 2 ஆண்டுக்கும் குறைவாக: 5.40% வட்டி, மூத்த குடிமக்களுக்கு 5.90%
8.    2 ஆண்டுகள், 3 ஆண்டுகளுக்கும் குறைவாக: 5.45%, மூத்த குடிமக்களுக்கு 5.95%
9.    2 ஆண்டுகள், 5 ஆண்டுகளுக்கும் குறைவாக: 5.70% வட்டி, மூத்த குடிமக்களுக்கு 6.20% வட்டி
10.    5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு அதிகமாக: 5.75% வட்டி, மூத்த குடிமக்களுக்கு 6.25 % வட்டி

Follow Us:
Download App:
  • android
  • ios