Can you invest in a business that you dont have any knowledge about that?
தங்கம் இன்று எவ்வளவு வர்த்தகம் ஆகிறது. வீட்டின் சதுரடி மதிப்பு இன்று எவ்வளவு என்பதை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் முதலீடு செய்த பங்குகள் மட்டும் இன்று எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை பார்க்கத் தவறுவதில்லை.
முதலீடு செய்த பங்குகளின் மதிப்பை தினமும் பார்ப்பது எப்படி தவறோ அதேபோல பார்க்காமல் விட்டுவிடுவதும் தவறு. பங்குகளின் விலையை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு முதலீடு செய்திருந்த பங்குகளை பற்றி என்ன செய்திகள் வருகின்றன என்பதில் கவனம் செலுத்தலாம்.
செய்திகள் சரியாக இல்லை என்றால் அவற்றை விற்பதை பற்றி பரிசீலனை செய்யலாம்.
எதில் முதலீடு?
பங்குச் சந்தையில் முதலீடு ஏன் தேவை என்பதற்கு காரணங்கள் கூறலாமே தவிர, எந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்த பிறகு முதலீடு செய்யுங்கள். பங்குச்சந்தை வல்லுநர்களுடன் விவாதியுங்கள்.
நீங்கள் முதலீடு செய்யப்போவது பங்குகளில் அல்ல, தொழிலில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உணருங்கள், அதேபோல உங்களுக்கு தெரியாத தொழிலில் முதலீடு செய்யாதீர்கள் என்ற வாரன் பபெட்டின் ஆலோசனையை நினைவில் கொள்வதும் நல்லது.
