Asianet News TamilAsianet News Tamil

LIC IPO:எல்ஐசி ஐபிஓ வெளியீட்டில் அன்னியநேரடி முதலீட்டாளர்களுக்கு அனுமதியா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு

எல்ஐசி ஐபிஓ வெளியீட்டில் அன்னிய நேரடி முதலீட்டாளர்களையும் அனுமதிக்கும் வகையில் கொள்கைகளை மாற்றி அமைக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.

Cabinet likely to consider proposal for FDI in IPO-bound LIC on Saturday
Author
New Delhi, First Published Feb 26, 2022, 11:21 AM IST

எல்ஐசி ஐபிஓ வெளியீட்டில் அன்னிய நேரடி முதலீட்டாளர்களையும் அனுமதிக்கும் வகையில் கொள்கைகளை மாற்றி அமைக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100% பங்குகளில் வெறும் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கு ஐஆர்டிஏஐ ஒப்புதல் அளித்த நிலையில்  வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. இந்த அறிக்கைக்கு பிஎஸ்இ, என்எஸ்இ அமைப்பும் , செபியும் ஒப்புதல் அளித்துவிட்டன. 

Cabinet likely to consider proposal for FDI in IPO-bound LIC on Saturday

மத்திய அரசு  5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை(870 கோடி டாலர்) திரட்ட  திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன. 

இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. அதாவது எல்ஐசியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரையிலும், பாலிசிதாரர்களுக்கு 5 % வரையிலும் தள்ளுபடி தரப்படலாம் எனத் தெரிகிறது.
எல்ஐசி ஐபிஓ விற்பனை குறித்து மத்திய அரசு சார்பிலும், எல்ஐசி நிறுவனம் சார்பிலும் தேதி உறுதியாக அறிவிக்கப்படாதநிலையில், மார்ச் 11ம் தேதி நடக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Cabinet likely to consider proposal for FDI in IPO-bound LIC on Saturday

இந்நிலையில் எல்ஐசி பங்குவிற்பனையில் அன்னிய நேரடி முதலீட்டாளர்களையும் பங்கேற்க வைப்பது குறித்து மத்திய அரசின் தொழில்துறைஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகப்பிரிவு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதிஅமைச்சகத்திடம் ஏற்கெனவே இந்ததுறை ஆலோசனை நடத்தியநிலையில் மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துச் செல்கிறது.

அன்னியநேரடி முதலீட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை, காப்பீடுத் துறையில் 74சதவீத முதலீட்டுக்கு எந்தவிதமான தடையில்லாமல் ஆட்டமேட்டிக்ரூட் மூலம் அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்த விதிகள் எல்ஐசி நிறுவனத்துக்குப் பொருந்தாது, ஏனென்றால்,எல்ஐசிக்கு தனியாக எல்ஐசி சட்டம் இருக்கிறது. 

ஆனால், பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியின் விதிப்படி, ஒரு நிறுவனத்தின் ஐபிஓ நடந்தால், அதில் எப்பிஐ எனப்படும் போர்ட்போலியா இன்வெஸ்டர்ஸ் மற்றும் எப்டிஐ எனப்படும் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் எல்ஐசி விதிகளில் அன்னிய முதலீட்டுக்கு எந்தவிதமான விதிமுறையும் இல்லை. அன்னிய முதலீட்டாளர்கள் ப ங்கேற்க வேண்டுமானால், எல்ஐசி விதிகளிலும், செபிவிதிகளிலும் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

Cabinet likely to consider proposal for FDI in IPO-bound LIC on Saturday

இதுகுறித்துமத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ எல்ஐசி ஐபிஓ  வெளியீட்டில் அன்னியநேரடிமுதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை சனிக்கிழமை கூடும்போது முக்கியமாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தன.


 

Follow Us:
Download App:
  • android
  • ios