மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் நிலையில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியப்பங்குச்சந்தைக்கு இன்று(மார்ச்1ம்தேதி) விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் நிலையில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசியப்பங்குச்சந்தைக்கு இன்று(மார்ச்1ம்தேதி) விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பங்குச்சந்தையில் மொத்தவிற்பனை சந்தையான உலோகம், பணமாற்று சந்தை உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். அன்னிய செலாவனிச் சந்தை, கமாடிட்டி சந்தை அனைத்தும் இன்று இயங்காது.
ஆனால், மார்ச்2-ம் தேதி நாளை வழக்கம் போல் பங்குச்சந்தையில் வர்த்தகம் நடக்கும்.
மும்பைபங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 366 புள்ளிகள் உயர்ந்து, 57,858 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 128 புள்ளிகள் அதிகரித்து, 17,278 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது.

மாருதி சுஸூகி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, யுபிஎல் ஆகியவை நிப்டியில் அதிகமான லாபமீட்டிய பங்குகளாகும். விப்ரோ, பஜாஜ் பின்சர்வ், டைட்டன் நிறுவனம், இன்போசிஸ், டெக் மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் இழப்பில் முடிந்தன.
ரஷ்யா மீது அமெரி்க்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள புதிய தடைகள், ரஷ்ய வங்கிகளுக்கு விதித்த தடைகள்போன்றவை போரைத் தீவிரப்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் நம்பியதால் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தது. விரைவில் மீண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சென்க்ஸபுள்ளிகள் 700புள்ளிகள் சரிந்தது.தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 177 புள்ளிகள் குறைந்தது

ஆனால், பிற்பகலுக்குபின் பங்குசந்தையில் நிலைமை மாறியது. ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற செய்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தது. இதனால், பிற்பகலுக்குப்பின் பங்குகளை உற்சமாக முதலீட்டாளர்கள் துணிந்து வாங்கினார் புள்ளிகள் உயரத் தொடங்கி ஏற்றத்துடன் முடிந்தது.
