நேற்றைய வர்த்தகத்தில், ஆசிய பங்குச் சந்தையில் பிரிட்டிஷ் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு மிகக் கடுமையாக சரிவடைந்தது.
அதாவது, நேற்றைய வர்த்தகத்தில் 6 சதவீதம் வரை பவுண்ட் மதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய பங்குச் சந்தையில், நேற்று, ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 1.1819 ஆக சரிந்தது.
இதற்கு முன்னதாக, 1985-ம் ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு தற்போது தான் மிகப் பெரிய சரிவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகத் தயாராவதால், அதனோடு உள்ள பேச்சுவார்த்தைகளில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் தெரிவித்ததே , இந்த சரிவிற்கு காரணம் என தெரிகிறது.
அதே சமயத்தில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகப் போவதாக அறிவித்ததிலிருந்தே பவுண்ட் மதிப்பு சரிவது குறிப்பிடத்தக்கது.
