இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தம் – இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும்
அமெரிக்கா இந்தியா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தை இந்த ஆண்டு மத்தியில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்த ஆண்டு மத்தியில் அணு சக்தி ஒப்பந்தம், குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டால், அணுமின் நிலைய திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக இந்த ஆண்டு இறுதிக்குள், இரு நாடுகளும அறிவிக்கும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக , அதில் முக்கிய பணியாற்றும் வெஸ்டிங் ஹவுஸ் என்ற நிறுவனத்துடன் அமெரிக்க அதிபர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, அனுசக்தி ஒப்பந்தம் குறித்து, முன்னாள் அதிபர் புஷ் தலைமையிலான அரசில் மேற்கொண்ட முயற்சி ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், இது குறித்த முக்கிய முடிவுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
