ஆரக்கிளின் பங்குகள் 244 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் கூட்டு மதிப்புடன் பொருந்துகிறது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஆன ஆரக்கிள் (Oracle) தற்போது உலகமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரே நாளில் $244 பில்லியன் (சுமார் ₹20 லட்சம் கோடி) மதிப்பில் அதன் பங்குகள் உயர்ந்தன. இது இந்தியாவின் மூன்று பெரிய ஐடி நிறுவனங்களான TCS, Infosys, HCL Tech இவற்றின் மொத்த சந்தை மதிப்பிற்கு சமமானது ஆச்சரியம் ஆகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த அபாரமான பங்கு உயர்வு, Oracle நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன்-க்கு, உலகின் பணக்காரர் பட்டத்தை ஒரு சிறு நேரத்துக்கு எலான் மஸ்க்-கிடமிருந்து பறிக்க உதவியது. பங்குகள் ஏறியதன் மூலம் அவரின் சொத்து மதிப்பு திடீரென அதிகரித்தது.

ஆரக்கிள் பங்குகள், புதன்கிழமை அமெரிக்க சந்தையில் 36% உயர்வுடன் முடிவடைந்தது. இதனால், அதன் மொத்த சந்தை மதிப்பு $922 பில்லியன்-ஐ எட்டியது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் வளர்ச்சி கண்டது தொழில்நுட்ப வரலாற்றில் அரிதானது.

இந்த பங்கு உயர்வுக்கு காரணம், ஆரக்கிள் நிறுவனம் தனது கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ராக்சர் வியாபாரத்தில் பெரும் வளர்ச்சி எதிர்பார்ப்பதாக அறிவித்ததுதான். 2025ஆம் நிதியாண்டில் $10.3 பில்லியன் வருவாய், 2030க்குள் $144 பில்லியன் ஆக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கிளவுட் சேவைத் துறையில் ஆரக்கிள், ஏற்கனவே Amazon, Microsoft போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. இப்போது பல மடங்கு வளர்க்கும் திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

மொத்தத்தில், ஒரே நாளில் $244 பில்லியன் உயர்வு என்பது, ஒரு நாட்டின் ஐடி மாபெரும் நிறுவனங்களின் மொத்த மதிப்பிற்கு இணையான சாதனை. இதன் மூலம் Oracle, தனது வலிமையை உலக சந்தையில் மீண்டும் நிரூபித்துள்ளது.