நடப்பாண்டு ஜூலை மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், ஏடிஎம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் வழக்கம் போல் இந்த நாட்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2023 ஜூலை மாதத்திற்கான வங்கிகள் விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், ஏடிஎம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் வழக்கம் போல் இந்த நாட்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைகளில் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். ரிசர்வ் வங்கி பட்டியலின்படி, வார இறுதி நாட்களைத் தவிர, முஹரம், குரு ஹர்கோவிந்த் பிறந்தநாள், அஷூரா, கேர் பூஜா, பானு ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்கள் விடுமுறைகள் விடப்பட்டுள்ளன. இந்த அரசு சார்ந்த வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம். உள்ளூர் பண்டிகைகளின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களுக்கான விடுமுறைகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

அதன்படி, ஜூலை 5 ஆம் தேதி குரு ஹர்கோவிந்த் பிறந்தநாளன்று ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேர் பூஜையை முன்னிட்டு ஜூலை 11 ஆம் தேதி திரிபுரா மாநிலம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜூலை 29 அன்று முஹரம் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2023 வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல்:

ஜூலை 2, 2023: ஞாயிறு
ஜூலை 5, 2023: குரு ஹர்கோவிந்த் சிங் ஜெயந்தி - ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 6, 2023: Mizo Hmeichhe Insuihkhawm Pawl (MHIP) நாள்- மிசோரமில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 8, 2023: இரண்டாவது சனிக்கிழமை
ஜூலை 9, 2023: ஞாயிறு
ஜூலை 11, 2023: கேர் பூஜை - திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 13, 2023: பானு ஜெயந்தி - சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 16, 2023: ஞாயிறு
ஜூலை 17, 2023: யு டிரோட் சிங் டே- மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 21, 2023: Drukpa Tshe-zi - சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 22, நான்காவது சனிக்கிழமை
ஜூலை 23, 2023: ஞாயிறு
ஜூலை 28, 2023: அஷூரா - ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 29, 2023: முஹரம் பண்டிகை
ஜூலை 30, 2023: ஞாயிறு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் புதிய தலைவர்? ரேஸில் யார்?