Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் இக்கட்டான சூழலிலும் வங்கிகள்.. பகீர் கிளப்பும் ரிசர்வ் வங்கி ஆளுநர்.. முழு பேட்டி விவரம் உள்ளே..!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பின் 2வது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டியளித்து வருகிறார். அதில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை  ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. 

Banks critical situation...reserve bank governor Shaktikanta Das
Author
Delhi, First Published Apr 17, 2020, 10:45 AM IST

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் என்று ரிசர்வ் வங்கி சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பின் 2வது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டியளித்து வருகிறார். அதில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை  ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. 

சக்திகாந்த தாஸ் பேட்டியின் முழு விவரங்கள்;-

* வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.

* இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன. 

* கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது.

* கொரோனாவுக்கு எதிரான போருக்கு ரிசர்வ் வங்கி முழுமையாக தயாராக உள்ளது. 

* உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. 

* கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

* மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. 

* 2021-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

* இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. 

* இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது

* கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது

* உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று

* இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது; இது ஜி-20 நாடுகளில் அதிகம் 

* கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது

* கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது

* ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது

* இந்தியாவின் அனைத்து வங்கிகளையும் சேர்த்து ரூ.4.36 லட்சம் கோடி கையிருப்பில் உள்ளது. 

* நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியல் 3.2 சதவீத மதிப்பிலான பணம் ரிசர்வ் வங்கியால் செலுத்தப்பட்டுள்ளது. 

* சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்தியா முழுவதும் 10 சதவீத ஏடிஎம்கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. 

* இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது

* ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணிப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

* கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு

* அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம்.

* வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4% லிருந்து 3.75%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios