Bank frauds : கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடி பெருமளவு குறைந்துவிட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.648கோடி மோசடி நடந்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடி பெருமளவு குறைந்துவிட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.648கோடி மோசடி நடந்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
வங்கி மோசடி விவரங்கள் குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் பாகவத் காரத் எழுத்துப்பூர்வ பதில்அளித்தார். அவர் கூறியதாவது:
வங்கி மோசடி குறைவு

வங்கி மோசடி கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவு குறைந்துவிட்டது. கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.61,229 கோடி வங்கி மோசடி நடந்தது. இதுபடிப்படியாகக் குறைக்கப்பட்டது, 2020-21ம் ஆண்டில் ரூ11,583 கோடியாகக் குறைந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.648 கோடிக்கு மோசடி நடந்துள்ளது.
தனியார் வங்கிகள்
நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக கோடக் மகிந்திரா வங்கியில் ரூ.ஒரு லட்சம் அதற்கும் அதிகமாக 642 மோசடிகள் நடந்துள்ளன. அதைத்தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியில் 518 மோசடிகள், இன்டஸ்இன்ட் வங்கியில் 317 மோசடிகள் நடந்துள்ளன

அதிலும் கோடக் மகிந்திரா வங்கியில் வங்கி மோசடி தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 2017ம் ஆண்டில் 135 ஆக இருந்த மோசடி 2021ல் 826ஆக அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கி மோசடி 642 ஆக அதிகரித்துள்ளது. ஆக்சிஸ் வங்கியில் 235 மோசடிகள், எஸ்பிஐ வங்கியில் 159 மோசடிகள், ஹெட்சிஎப்சி வங்கியில் 151 மோசடிகள் நடந்துள்ளன.
ரிசர்வ் வங்கி
வங்கி மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி வகுத்த நெறிமுறைகள், கடினமான முடிவுகளால் மோசடிகள் குறைந்தன. வங்கி மோசடிகளைக் குறைப்பதற்காக 2016ம் ஆண்டு மிகப்பெரிய அளவிலான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது. மத்திய அரசும் அமைப்புரீதியாக மோசடிகளை் தடுக்க நடவடிக்கை எடுத்தது.
இவ்வாறு காரத் தெரிவித்தார்
