வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை, இபிஎப், பிபிஎப் ஆகிய 3 திட்டங்களை தேர்வு செய்வது எப்போதுமே குழப்பமானதுதான். இதில்  எதில்முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என்பதை ஒப்பிட்டு அடிப்படையில்தான் பார்க்க முடியும்

வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை, இபிஎப், பிபிஎப் ஆகிய 3 திட்டங்களை தேர்வு செய்வது எப்போதுமே குழப்பமானதுதான். இதில் எதில்முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என்பதை ஒப்பிட்டு அடிப்படையில்தான் பார்க்க முடியும்

செல்வமகள் சேமிப்பு

இந்த 3 திட்டங்களில் அதிகபட்சமாக பிஎப் திட்டத்துக்குத்தான் மத்திய அரசு அதிகபட்சமாக 8.50 சதவீதம் வட்டி வழங்கி வந்தது. ஆனால், அதையும் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் 8.10 சதவீதமாகக் குறைத்துவிட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும்.

இதற்கிடையே சேமிப்புத் திட்டங்களான பிபிஎப், சுகன்யா சம்ரிதி திட்டம்(செல்வமகள் சேமிப்புதிட்டம்) ஆகியவற்றுக்கும் வட்டி இதுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கும் வட்டிவீதம் மாற்றப்படவில்லை.

பிபிஎப் வட்டிவீதம்

2021-22ம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் பிபிஎப் திட்டத்துக்கு வட்டி 7.10 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம்(எஸ்சிஎஸ்எஸ்)திட்டத்துக்கும் வட்டி வீதம் 7.40 சதவீதமாகவும், அஞ்சல சேமிப்புதிட்டங்கள், வைப்புத் திட்டங்களுக்கு 5.5சதவீதம் முதல் 6.7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் நலனுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 

வங்கி வைப்புத் தொகை வட்டி

பொதுத்துறை வங்கிகளில் பெரியதான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரூ.2 கோடிக்கும் குறைவான 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும் டெபாசிட்களுக்கு5.20 சதவீதம் வட்டி வழங்குகிறது. 3 ஆண்டுகள் முதல் 5ஆண்டுகளுக்கு மிகாமல் இருந்தால், அதற்கு 5.45 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள்வரையிலான டெபாசிட்களுக்கு 5.50 சதவீதம் வட்டிவழங்கப்படுகிறது.

ஹெச்டிஎப்சி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள டெபாசிட்ககளுக்கு 5 முதல் 10 புள்ளிகள் வரை வட்டியை உயர்த்தியுள்ளது. ஓர் ஆண்டு வைப்புத் தொகைக்கு 5 சதவீதம் வட்டியும், 3 ஆண்டுமுதல் 5 ஆண்டுகள்வரையிலான டெபாசிட்களுக்கு 5.45 சதவீதம் வட்டியும் வழங்குகிறது. இந்த வட்டிவீதம் கடந்த மாதம் 14ம் தேதி முதல் அமலில் இருக்கிறது

இபிஎப்

8.10% வட்டி

பிபிஎப்

7.10% வட்டி

ஹெச்டிஎப்சி வங்கி(FD)

5.45 % முதல் 5.60% வரை வட்டி

எஸ்பிஐ வங்கி(3-5 ஆண்டுகள்வரை)

5.45% முதல் 5.50% வரை வட்டி

பிஓடிடி(5ஆண்டு)

6.70 %