ஜூலை 1 முதல் ஐசிஐசிஐ, ஆக்சிஸ், ஃபெடரல் வங்கிகளின் ஏடிஎம் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு. பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், ஐஎம்பிஎஸ், டிமாண்ட் டிராஃப்ட் போன்ற சேவைகளுக்கான கட்டண மாற்றங்கள்.

ஜூலை 1 முதல் ஐசிஐசிஐ, ஆக்சிஸ், ஃபெடரல் வங்கிகளின் ஏடிஎம் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு. பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், ஐஎம்பிஎஸ், டிமாண்ட் டிராஃப்ட் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி பொதுத்துறை வங்கிகள் ஏடிஎம் கட்டணங்களை மாற்றியமைத்தன. தற்போது ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகளும் கட்டண உயர்வை அறிவித்துள்ளன.

ஐசிஐசிஐ வங்கி (ஜூலை 1 முதல்):

மற்ற வங்கி ஏடிஎம்களில்: மெட்ரோ நகரங்களில் மாதம் 3 இலவச பரிவர்த்தனைகள். மற்ற இடங்களில் மாதம் 5 இலவச பரிவர்த்தனைகள். அதற்கு மேல் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.21 + ஜிஎஸ்டி, நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு ரூ.8.50 + ஜிஎஸ்டி.

டிமாண்ட் டிராஃப்ட்/பே ஆர்டர்: ரூ.10,000 வரை ரூ.50. அதற்கு மேல் ரூ.1,000க்கு ரூ.5. குறைந்தபட்சம் ரூ.75, அதிகபட்சம் ரூ.15,000. சலுகைக் கட்டணம் (மூத்த குடிமக்கள், மாணவர்கள், கிராமப்புற கிளைகள்): ரூ.10,000 வரை ரூ.40, ரூ.10,000க்கு மேல் ரூ.50,000 வரை ரூ.60, ரூ.50,000க்கு மேல் ரூ.1,000க்கு ரூ.5. அதிகபட்சம் ரூ.15,000.

NEFT: ஆன்லைனில் இலவசம். கிளையில் ரூ.10,000 வரை ரூ.2.25, ரூ.10,001 - ரூ.1 லட்சம் வரை ரூ.4.75, ரூ.1 லட்சம் - ரூ.2 லட்சம் வரை ரூ.14.75, ரூ.2 லட்சம் - ரூ.10 லட்சம் வரை ரூ.24.75.

RTGS: ஆன்லைனில் இலவசம். கிளையில் ரூ.2 லட்சம் - ரூ.5 லட்சம் வரை ரூ.20, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.45.

ஆக்சிஸ் வங்கி (ஜூலை 1 முதல்):

மெட்ரோ நகரங்களில் மாதம் 3 இலவச பரிவர்த்தனைகள். மற்ற இடங்களில் மாதம் 5 இலவச பரிவர்த்தனைகள். அதற்கு மேல் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23, நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு ரூ.10-12.

ஃபெடரல் வங்கி (ஜூன் 1, 2025 முதல்):

மற்ற வங்கி ஏடிஎம்களில்: நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23, நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு ரூ.12. ஃபெடரல் வங்கி ஏடிஎம்களில் கட்டணமில்லை. போதிய இருப்பு இல்லாததால் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.25.

லாக்கர் வாடகை மற்றும் தாமதக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.