சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை கடுமையாகஅதிகரித்துள்ள நிலையில், விமான எரிபொருள் விலை இன்று 3.3% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 5-வதுமுறையாக விலை அதிகரி்த்துள்ளது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை கடுமையாகஅதிகரித்துள்ள நிலையில், விமான எரிபொருள் விலை இன்று 3.3% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 5-வதுமுறையாக விலை அதிகரி்த்துள்ளது
விமான எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளதால், இனிமேல் உள்நாட்டுப் பயணம், வெளிநாட்டுப்பயண்துக்கான விமானக் கட்டணம் மேலும்அதிகரி்க்கும்.
ஆனால், பெட்ரோல், டீசல் விலை கடந்த 116 நாட்களாக விலை மாற்றமில்லாமல் இருந்து வருகிறது. 5 மாநிலத் தேர்தல் வரும் 7ம்தேதி முடிவதால், அதன்பின் விலை உயர்வை எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது

விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள் ஒரு கிலோலிட்டர் 3.22% உயர்ந்து, அதாவது ரூ.3,010.87அதிகரித்து, ரூ.93,530.66க்கு விற்பனையாகிறது.
விமானங்கள் இயக்கப்படும் செலவில் 40 சதவீதம் விமான எரிபொருள் செலவாகவே இருந்துவிடுகிறது. அதிலும் இந்த ஆண்டில் மட்டும் 5 முறை விலை ஏற்றப்பட்டுள்ளது. ஏடிஎப் பெட்ரோல் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி, 16ம் தேதி சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றப்படும்.
இதற்கு முன் கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிலோலிட்டர் ரூ.71,028 ஆகஇருந்தது. அப்போது, கச்சா எண்ணெய் சர்வதேசசந்தையில் பேரல் 147டாலருக்கு உயர்ந்தது. ஆனால், தற்போது பேரல் 100 டாலர்தான் இருக்கிறது.
அதாவது கச்சா எண்ணெய் விலை 100 டாலராக இப்போது இருக்கிறது, ஆனால், விமான எரிபொருள் விலை கிலோலிட்டர் ரூ.93,530.66க்கு விற்பனையாகிறது. ஆனால், கடந்த 2008ம் ஆண்டு கச்சா எண்ணெய் சர்வதேசசந்தையில் பேரல் 147டாலராக இருந்தபோது, அப்போது, எரிபொருள் கிலோ லிட்டர் ரூ.71,028ஆகத்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டு பிறந்ததில் இருந்து, 5 முறை ஏடிஎப் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது,அதாவது 26.25 சதவீதம் விலை, ரூ.19,508 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நவம்பரிலும், டிசம்பரிலும் சரிந்ததால் டிசம்பர் மாதத்தில் 2 முறை விலை குறைக்கப்பட்டது. கடைசியாக 2021, நவம்பரில் அதிகபட்சமாக ஏடிஎப் பெட்ரோல் ரூ.80,835 ஆக இருந்தது.
