alliance air india: ஏர் இந்தியாவிலிரு்து பிரிந்தது 'அலையன்ஸ் ஏர்': மத்திய அரசின்கீழ் தனிவர்த்தக நிறுவனமானது

alliance air india :ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் இனிமேல் மத்திய அரசின் கீழ் தனிவர்த்தக நிறுவனமாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

alliance air india : Divorce complete with AI: Alliance Air to sell tickets with 9I code

ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் இனிமேல் மத்திய அரசின் கீழ் தனிவர்த்தக நிறுவனமாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடங்கப்பட்டாலும், ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. அதன்பின் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 

இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா அன்சன்ஸ் வாங்கியத்தைத் தொடர்ந்து அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் தனியாகப் பிரி்ந்தது. இதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தனி வர்த்தக நிறுவனமாக மாறியது. இதற்கான அறிவிப்பும் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது.

alliance air india : Divorce complete with AI: Alliance Air to sell tickets with 9I code

இதன்படி “ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தபின், அலையன்ஸ் ஏர் நிறுவனம் அதிலிருந்து பிரிந்துவிட்டது. 2022, ஏப்ரல் 15ம் தேதி முதல் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மத்தியஅரசின் கீழ் தனி வர்த்தக நிறுவனமாகச் செயல்படும்” எனத் தெரிவித்தார்

அலையன்ஸ் ஏர் நிறுவனம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தின் கீழ் 19 விமானங்கள் உள்ளன, இதில் 18ஏடிஆர்-72, ட்ரோனியர்-228 ரக விமானங்கள் உள்ளன. ஏறக்குறைய 2-ம்நிலை, 3-ம் நிலை நகரங்களுக்கு 100 வழித்தடங்களில் அலையன்ஸ் ஏர் நிறுவனம் விமானத்தை இயக்கி வருகிறது,

alliance air india : Divorce complete with AI: Alliance Air to sell tickets with 9I code

கடந்த 2019-20ம் ஆண்டில் அலையன்ஸ் ஏர் நிகர லாபம் ரூ.65 கோடியாகும், வருவாய் ரூ.1,182 கோடியாகும். மத்திய அரசின் கீழ் இருக்கும் ஒரே விமான நிறுவனம் அலையன்ஸ் ஏர் மட்டும்தான்.

இனிமேல் தனிவர்த்தக நிறுவனமாகச் செயல்படும் அலையன்ஸ்ஏர் தனது டிக்கெட்டில் 9ஐ('9I-XXX')  என்ற கோடில் விற்பனை செய்யும்.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று ட்விட்டரில் பதிவி்ட்டிருந்த செய்தியில் “ ஏர் இந்தியா டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் கவனத்துக்கு. விமான எண் 9 அல்லது 3 எண் தொடங்கும் வகையில் 4 இலக்கத்தில் இருந்தால்,  அது ஏர் இந்தியாவுக்கானது அல்லது. அது அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அங்கு இந்த டிக்கெட் விவரங்களைக் கூறி தகவல் பெறவும்” எனத் தெரிவித்துள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios