சரசரவென குறைந்த தங்கம் விலை..! மாலை நேரத்தில் சடன்னா டவுன்..! 

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும்  அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்திய மத்திய பட்ஜெட்டிலும் தங்கத்தின் மீதான வரி 10 % இருந்து 12.5 % சதவீதமாக உயர்வு செய்யப்பட்டு உள்ளதால், சவரனுக்கு ரூ. 560 வரை உயர வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 3288 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனையானது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராம் ஒன்றுக்கு, 24 ரூபாய் குறைந்து, 3264 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால்,மாலை நேரத்தில் மட்டும் சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து உள்ளது. ஆக மொத்தத்தில், இன்று ஒரே நாளில், 312 ரூபாய் குறைந்து உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் 20 கிராம் குறைந்து கிராம் 41.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.