airtel: வட்டிச் செலவைக் குறைப்பதற்காக ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையில் ரூ.8,815 கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியுள்ளது.
வட்டிச் செலவைக் குறைப்பதற்காக ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையில் ரூ.8,815 கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம்
கடந்த 2015ம் ஆண்டு பார்திஏர்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் வாங்கியதில் நிலுவை இருந்து வருகிறது. அது 2027, மற்றும் 2028ம் ஆண்டுதான் செலுத்தி முடிக்க முடியும் என்பதால் வட்டிச் செலவைக் குறைக்க பகுதிபகுதியாக முன்கூட்டியே தொகையை ஏர்டெல் செலுத்திவருகிறது.

வட்டிச் செலவைக் குறைப்பதற்காக கடந்த 3 மாதங்களில் இதுபோல் முன்கூட்டியே ஏர்டல் நிறுவனம் பணம் செலுத்துவது 2-வது முறையாகும்.
கடந்த 4 மாதங்களில் மட்டும் ஏர்டெல் நிறுவனம் ரூ.24,334 கோடி ஸ்பெக்ட்ராம் வாங்கிய நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளது
வட்டிச் செலவு
. இந்த கடனுக்கு 10 சதவீதம் வட்டி விதிக்கப்படும் என்பதால் வட்டிச் செலவைக் குறைக்க விரைவாக கடனைச் செலுத்திவருகிறது. ஏர்டெல் சுமார் ரூ.67,000 கோடி ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையையும், ரூ.25,000 கோடி மொத்த வருவாய் நிலுவைத் தொகையையும் சரிசெய்துள்ளது.
மூலதன கட்டமைப்பின் மூலம் நிதி நெகிழ்வுத்தன்மையில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். நிதிச் செலவை மேம்படுத்துதல் மற்றும் வட்டிச் சேமிப்பின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறோம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருமானம் சரிவு
கடந்த 2014ம் ஆண்டு 128.4 ஹெட்ஸ் ஸ்பெட்ரம் வாங்கியதில் , டிசம்பர் மாதம் ரூ.15,519 கோடியை ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது. ஏர்டெல் நிறுவனம் முன்கூட்டியே தொகையைச்செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3400 கோடி வட்டி சேமிக்கப்படும்.
அதிகமான வட்டி செலவு காரணமாக, நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நிகர லாபத்தில் 2.8 சதவீதம் சரிந்தது, நிகர லாபம் ரூ.830 கோடியாக இருந்தது. 3-வது காலாண்டில் ரூ.8803 கோடி வருமானம் ஈட்டியது ஏர்டெல் நிறுவனம், ஆனால், கடந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் ரூ.7,046 கோடி மட்டுமே ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
