air india flight : கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு வழங்க டாடா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு வழங்க டாடா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டாடா ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்குவாங்கிய 3 மாதத்தில் இந்த நடவடிக்கையை டாடா நிறுவனம் எடுத்துள்ளது.
கொரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விமானப் போக்குவரத்துத் துறைபல்வேறு நெருக்கடிகளையும், பொருளாதார சிக்கல்களையும் சந்தித்துவநத்து. இதனால் வேறுவழியின்றி பல்வேறு விமானநிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளக்குறைப்பை அமல்படுத்தின. ஏர் இந்தியா விமான ஊழியர்களுக்கு ப்ளையிங் அலவன்ஸ் 35 சதவீதம், ஸ்பெஷல் பே 40% பராமரிப்புச் செலவு 35 சதவீதம்பிடிக்கப்பட்டது.
ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விலைக்கு வாங்கியது. அதன்பின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. விமானப் போக்குவரத்தும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி இயல்வுநிலைக்கு வரத் தொடங்கியது.

ஊதியப் பிடித்தம்
இதையடுத்து கொரோனா காலத்தில் சம்பளப்பிடித்தத்தை படிப்படியாக திரும்பவழங்க டாடா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி ப்ளையிங் அலவன்ஸ் 20%, ஸ்பெஷல் பே 25%, பராமரிப்புச் செலவு 25% ஆகியவை முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. விமான பணிப்பெண்களுக்கும் ப்ளையிங் அலவன்ஸ் 10%, பராமரிப்புச் செலவு 5% திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு அலவன்ஸில் 50 சதவீதமும், ஊழியர்களுக்கு 30 சதவீதமும் பிடிக்கப்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் ஏப்ரல் 1ம் தேதிமுதல் 25சதவீதம் திரும்பவழங்கப்பட்டுள்ளது.

இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட்
இதேபோல இன்டிகோ விமானநிறுவனமும் விமான பைலட்களுக்கான ஊதியத்தை ஏப்ரல் 1ம் தேதி முதல் 8 சதவீதம் வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் 28 சதவீதம் ஊதியத்தை பைலட்களுக்கு பிடிக்கப்பட்டநிலையில் 8 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பைலட்களுக்கான ஊதியத்தை 10 சதவீதமும், முதல்நிலை அதிகாரிகளுக்கு 15 சதவீதமும் உயர்த்தியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பயிற்சி எடுக்கவருவோருக்கு ஊதியம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது
