எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் நிறுவனத்தின் பங்கு கடந்த ஐந்து வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 206 மடங்கு லாபம் கொடுத்திருக்கிறது. ரூ. 2 பங்கு ரூ. 412-ஐ தொட்டு இருக்கிறது. இதனால முதலீட்டாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய், 2.06 கோடி ரூபாயாக லாபம் கொடுத்து இருக்கிறது.
Multibagger Stock: ஷேர் மார்க்கெட்டில் மல்டிபேக்கர், பென்னி ஸ்டாக்ஸ்லாம் நிறைய இருக்கிறது. ஆனா இதில் இன்வெஸ்ட் செய்றது சில நேரம் ரிஸ்க் ஆக இருக்கலாம். ஆனாலும், கரெக்டான பிளான் போட்டு, நல்லா தெரிஞ்சுக்கிட்டு முதலீடு செய்தால், சின்ன பங்கிலும் நிறைய லாபம் பார்க்கலாம். அதில் ஒன்றுதான் Aditya Vision பங்கு. இந்தப் கடந்த 5 வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு நிறைய லாபம் கொடுத்திருக்கு. இந்த பங்கு குறித்து முழுதாக பார்க்கலாம்.
5 வருடத்தில் 206 மடங்கு லாபம்
ஐந்து வருடத்துக்கு முன்பு, அதாவது பிப்ரவரி 2020ல் Aditya Vision பங்கு விலை வெறும் 2 ரூபாய் தான். கொரோனா நேரத்தில் பங்குச் சந்தை பெரிய அளவில் ஆட்டம் கண்டது. அதனால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு பயந்து கொண்டு இருந்தனர். அப்போது இருந்து, தற்போது வரைக்கும் இந்த பங்கு பயங்கரமாக உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பிப்ரவரி 21ஆம் தேதி கொஞ்சம் இறங்கிய பின்னர் 412.95 ரூபாய்க்கு க்ளோஸ் ஆனது. அதாவது இந்த பங்கு கடந்த 5 வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு கிட்டதட்ட 206 மடங்கு லாபம் கொடுத்திருக்கிறது.
ரூ.1 லட்சம் வரை சம்பளம் உயருமா? மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்
1 லட்சத்தில் 2.06 கோடி லாபம்:
பிப்ரவரி 2020ல யாராவது Aditya Vision பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தா அவர்களுக்கு 50,000 பங்குகள் கிடைத்து இருக்கும். அந்த முதலீட்டில் அப்படியே வைத்து இருந்தால், இன்று அதன் மதிப்பு 2.06 கோடி ரூபாய் இருக்கும். அதாவது இந்த பங்கு வெறும் 5 வருடத்தில் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கி இருக்கிறது.
Aditya Vision கடந்த வருடம், அதாவது 2024ல், 1:10 ரேஷியோவில் பங்குகளை பிரித்தாக கூறினார்கள். பங்குகளை பிரித்த பின்னர் யாரிடம் 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ உள்ள 1 ஷேர் இருந்ததோ, அவர்களுக்கு பங்கு பிரித்து, 1 ரூபாய் ஃபேஸ் வேல்யூ உள்ள 10 பங்குகளை கொடுத்தார்கள். பங்குகளை பிரித்து, கம்பெனி தன்னுடைய பங்குகளின் எண்ணிக்கைய அதிகப்படுத்தி, பங்கின் விலையை குறைக்கிறது. இதனால் சிறிய முதலீட்டாளர்களும் வாங்க முடியும்.
மாதம் 250 ரூபாய் சேமிப்பு ரூ.17 லட்சமாக மாறும்! பெரிய லாபம் தரும் சிறிய SIP முதலீடு!
2024-25 இண்டாவது காலாண்டில் லாபம்:
Aditya Vision 2024-25 நிதி வருடத்தில் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) 12.21 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தார்கள். கடந்த வருடம் இதே நேரத்தில் 9.63 கோடி ரூபாய் லாபம் பார்த்தார்கள். அத்துடன் ஒப்பிடும்போது, இது 26.8% அதிகம். இரண்டாவது காலாண்டில் கம்பெனிக்கு கிடைத்த வருமானம் 20% ஏறி 375.85 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் இது 313.13 கோடி ரூபாயாக இருந்தது.
