கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்களிடம் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல்வர் சந்திர பாபு நாயுடு தலைமையிலான ஒரு குழு , தங்களது கருத்துக்களை , மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.

அதில், ரூ5௦,௦௦௦ மேல், நடப்பு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தால், கட்டணம் வசூலிக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெபாசிட் தொகை குறையும்

இது போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தால், வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகையின் அளவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அத்திட்டம் கொண்டு வருவதே, மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் வங்கி அதிகாரிகள் முதற்கொண்டு , நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வரை , இந்த திட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

வங்கி அதிகாரிகள் அதிருப்தி 

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், நடப்பு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் தொகை வெகுவாக குறையும் என வங்கி அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர் .