Asianet News TamilAsianet News Tamil

abg shipyard news: ரூ22 ஆயிரம் கோடி மோசடி: ஏபிஜி கப்பல் நிறுவனத்தின் 26 இடங்களில் அமலாக்கப்பிரிவு ரெய்டு

abg shipyard news :ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமான மும்பை, புனை, சூரத் உள்ளிட்ட 26 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

abg shipyard news:  ED searches 26 locations in ABG Shipyard money laundering case
Author
Mumbai, First Published Apr 26, 2022, 1:21 PM IST

ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமான மும்பை, புனை, சூரத் உள்ளிட்ட 26 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

ரூ.22 ஆயிரம் கோடி மோசடி

பல்வேறு வங்கிளில் கடன் பெற்று ரூ.22 ஆயிரத்த 842 கோடி மோசடி செய்த வழக்கு, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் இந்தரெய்டு நடப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் செய்துள்ள மோசடிதான் நாட்டிலேயே மிகப்பெரிய மோசடியாகும்.

abg shipyard news:  ED searches 26 locations in ABG Shipyard money laundering case

இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக மும்பையில் 24 அலுவலகங்கள், இல்லங்கள் உள்ளன, புனேயில் ஒர் இடத்திலும், சூரத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடத்தப்பட்டுவருவதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரெய்டு நாளை தொடரும் என அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது

விசாரணை

இந்த மாதத் தொடக்கத்தில் ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரிஷி அகர்வாலிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை வேறு எந்தப் பணிகளுக்கு திருப்பிவிட்டுள்ளதையும், போலி நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டுள்ளது குறித்தும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

ஏபிஜி நிறுவனத்தின் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்து வருகிறது. சிபிஐ விசாரணை நடத்தி, தாக்கல் செய்த அறிக்கையி்ன் அடிப்படையில்தான் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மோசடி

ஏபிஜி நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 28 வங்கிகளில் மோசடி செய்துள்ளது. அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் ரூ.7,089 கோடி, ஐடிபிஐ வங்கியில் ரூ.3,639 கோடி, எஸ்பிஐ வங்கியில் ரூ.2,925 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.1614 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1,244 கோடி மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios