மிகப்பெரிய மோசடி: 28 வங்கிகளில் ரூ.23 ஆயிரம் கோடி மோசடி செய்த குஜராத் நிறுவனம்: சிபிஐ வழக்கு
நாட்டில் இதுவரை நடந்த வங்கி மோசடிகளில் மிகப்பெரியதாக குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் 28 வங்கிகளில் ரூ.23 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதை சிபிஐ கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாட்டில் இதுவரை நடந்த வங்கி மோசடிகளில் மிகப்பெரியதாக குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் 28 வங்கிகளில் ரூ.23 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதை சிபிஐ கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
28 வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 284 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின் பெயரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் ஏபிஜி ஷிப்யார்டு லிமிட். இந்தியாவிலேயே கப்பல் கட்டும் நிறுவனங்களில் மிகப்பெரியதாகவும், இதுவரை 160-க்கும் மேற்பட்ட கப்பல்களை கட்டமைத்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஸ்டேட் வங்கி, ஏபிஜி நிறுவனம் மீது வங்கி தொடர்பான புகாரை சிபிஐ அமைப்பிடம் அளித்தது. அந்தபுகாரை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்தப் புகாரில், ஏபிஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகையைஅந்தநிறுவனம் முறைகேடாக அதனுடைய பல்வேறு துணை நிறுவனங்களுக்கு வழங்கியது, கணக்குத்தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டு மோசடி உறுதியானதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது “2001ம் ஆண்டிலிருந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்துக்கு இருந்த 24 வங்கிகளின் கடனையும் ஒருங்கிணைத்து ஐசிஐசிஐ வங்கி பராமரித்து வருகிறது. நிறுவனத்தின் மோசமான செயல்பாட்டால் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி இந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கு வராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
2014ம்ஆண்டு மீண்டும் நிறுவனம் மறுக்கட்டமைப்புச் செய்யப்பட்டு, கடன் கொடுத்த பல்வேறு வங்கிகளும் உதவின. ஆனால், நிறுவனத்தின் நிலைமைஇன்னும் மோசமானது. 2016ம் ஆண்டு அறிவிப்பின்படி இந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கு அனைத்தும் வராக்கடனாக அறிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்ய, இருவர் கடந்த 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்த அறிக்கையை
மோசடி கண்டுபிடிப்புக் குழுவிடம் 2019ம் ஆண்டு தணிக்கை குழு தாக்கல் செய்தது. இந்த நிறுவனம் தனது வங்கிக்கடனில் பெரும் பகுதியை தனது துணை நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ததும், முறைகேடாகப் பயன்படுத்தியதும், மோசடியில்ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஐசிஐசிஐ வங்கி பிரதான கடன் கொடுத்த வங்கியாகவும், ஐடிஐபி வங்கி 2-வதாகவும் இருக்கிறது. ஐசிஐசிஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி ரூபாய் கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ அமைப்பிடம் இந்த மோசடி தொடர்பாக புகார்அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு தகவல்களை வங்கிகள், சிபிஐ வசம் தொடர்ந்து வழங்கின, சிபிஐ அமைப்பும் விசாரித்து வந்தது. கடன் கொடுத்த அனைத்து வங்கிகளும் சேர்ந்து கடந்த 2020, டிசம்பரில் மீண்டும் சிபிஐ அமைப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
வங்கி அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட தடவியல் தணிக்கை அறிக்கையின் முடிவில் ஏபிஜி நிறுவனம் செய்தது மோசடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோசடி என்று அறிவிக்கப்பட்டாலே போதுமானது, இருப்பினும் அதிகமானதவல்களை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளோம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது