aadhaar without pan will not accepted

ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் எண் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கருப்பு பண ஒழிப்பு காரணமாக எடுக்கப்பட்ட, உயர் மதிப்புக்கொண்ட ரூபாய் செல்லாது என அறிவிக்கப் பட்ட பின்பு பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிக்கும் நாம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் அதிகம் ஈடுபடவேண்டும் என்பதற்காக மத்திய அரசு பீம் செயலி உள்ளிட்ட பல முயற்சியில் ஈடுபட்டு வருகிறது .

தற்போது ஆதார் எண் இல்லாமல் எதையும் இயக்க முடியாது என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதன்படி ரேஷன் கார்ட், வங்கி உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண் இணைக்கப்படுகிறது . இந்நிலையில், ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால், பான் எண் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் படி அதற்காக கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .