a question to coke ceo
இந்தியாவுக்கான பெப்சி கோக் சிஇஒ வாக உள்ள, இந்திரா நூயிக்கு ஆண்டு வருமானமாக 195 கோடி சம்பளமாக உள்ளது.
சென்னையை சேர்ந்த இந்திரா நூயி பெப்சி கோ சிஇஒ வாக உள்ளார் .இந்த பதவியை இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வகித்து வருகிறார். இவருடைய நிர்வாகத்திறமையை பாராட்டி ஆண்டு சம்பளத்தில் 13 % அதிகமாக வழங்கப் படுகிறது .
அதாவது இவருக்கு ஆண்டு சம்பளமாக 29.8 மில்லியன் டாலர், இந்திய ரூபாயில் ரூ. 195 கோடி,வழங்கப்பட்டுள்ளது .
இவர் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெப்சி கோ, தமிழகத்தில் உள்ள தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என தடைவிதிக்கபட்டது. பின்னர் இந்திரா நூயி இது தொடர்பாக பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் .
பின்னர் வெளிவந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பில், தாமிரபரணியின் உபரி நீரை தான் எடுப்பதாகவும், அவர்கள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகவும் தீர்ப்பு வெளியானது.
விவசாயிகள் தண்ணீரின்றி வாடும் போது, தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுத்து வியாபாரம் செய்து பல கோடி ரூபாய்க்கு சம்பளம் வாங்குகிறார் இந்திரா நூயி என்ற கருத்து மக்களிடேயே வெகுவாக பேசப்பட்டு வருகிறது . இதற்குத்தான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா இந்திரா நூயி என்ற கேள்வியும் எழுந்துள்ளது .
