9 லட்சம் பேருக்கு கெடு
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மக்கள் தங்களிடமிருந்த அனைத்து பணத்தையும் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதில் கருப்பு பணமும் அடங்கும்.
இதில் குறிப்பாக, 5 லட்சத்திற்கும் அதிகமாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்களை மட்டும் வருமான வரித்துறையினர் கணக்கெடுத்து, வைத்துள்ளனர். அதன்படி 18 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விளக்கம் கேட்டு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதில் சுமார் 5.27 பேர் இ-பைலிங் முறையில் பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரீப் கல்யாண் திட்டம்
கருப்புப் பணம், டெபாசிட் செய்தவர்கள், கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம்,50 சதவீத வரி, அபராதம் மற்றும் கரீப் கல்யாண் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லா டெபாசிட்டாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அடுத்த மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சோதனை
கருப்புப்பண விவகாரத்தில், சந்தேகிக்கப்பட்ட வர்களில், பதில் அளிக்காத சுமார் 9 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
