ஜிஎஸ்டி வரி :  5%,  12%,  18%  &  28%....!!!  2017 ஏப்ரல் 1 முதல் அமல்...!!! மத்திய  அரசு திட்டம் ..!!!  

பல்வேறு வரி விதிப்புகளை நீக்கி ஒரே வரி விதிப்பின் கீழ் நாட்டை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை வரி ..

இது தொடர்பாக நேற்று  நடந்த  கூட்டத்தில்  அருண் ஜெட்லி விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து, 5%,  12%,  18%,  28%  ஆகிய விகிதங்களில் வரிகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரி  விவரம் :

''அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு   - 5 சதவீத வரி

மற்ற பொருட்கள் - 12%, 18% இருக்கும்..

புகையிலைக்கு  - 28 சதவீதம் வரி விதிக்கப்படும். மேலும் சோடா கலந்த குளிர்பானங்களுக்கு இதேபோன்று வரி விதிக்கப்படும்'' என்றார்.

அதேசமயம், டிவி, ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகிய பொருட்கள் மீதான வரி குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் தொழில் செய்வது எளிதாக்கப்படுவதுடன், வருவாயும் அதிகரிக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த  வரிவிதிப்புக்கு இரு அவைகளிலும்  ஒப்புதல் அளித்த பின்னரே, மத்திய அரசின் திட்டத்தின்படி, 2017, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்  அமலுக்கு  வரும்   என  அதிர்பார்க்கபடுகிறது....