42,000 ரூபாயில் சவரன்  வாங்கும் பண முதலைகள்.....: கள்ளச்சந்தையில் விறு விருப்பு.....!!!

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்ததை தொடர்ந்து,  தாங்கள்  வீட்டில் பதுக்கி  வைத்திருந்த, கட்டு கட்டான   நோட்டுகளை, தங்க  கடைகளில்  கொடுத்து , அதிகளவில்  தங்கம்  வாங்கியுள்ளனர்  பலர்.

இதன்  மூலம் , கணக்கில்  வராத   தொகை, நகையாக மாறியுள்ளது  என்று தான்  கூற வேண்டும்........

தற்போது தங்கம் வாங்கினாலும் , அதிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதால், கள்ளசந்தையில் விற்பனை  அதிகரிக்க  தொடங்கியுள்ளதாக  செய்திகள்  வெளியாகியுள்ளது. அதுவும் கூட ஒரு  சவரன்  42,000  ரூபாய்க்கு   வாங்குகின்றனர்கள்  என்றால் பாருங்களேன்.....

ஒரு பக்கம் கருப்பு  பணம்  பதுக்கல் அழிய ஆரம்பிக்குது...........மற்றொரு பக்கம் தங்கம்  பதுக்கல்  தற்போது  மேலும் களைஎடுத்துள்ளது........கண்ணெதிரே  பார்க்க  முடிகிறது.......!!!