3 tiimes food in up



வெறும்  ரூ.13க்கு மூன்று வேளை சாப்பாடு அளிக்கும் திட்டத்தை புதியதாக  பதவி ஏற்ற உத்திர பிரதேச  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.

முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் முதல்வராக  பதவி ஏற்ற  பிறகு, பல்வேறு  அதிரடி மாற்றங்கள்  நடைபெற்று  வருகிறது . இதனை  தொடர்ந்து தற்போது,  ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.13க்கு மூன்று வேளை உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ‘அன்னபூர்ணா கேண்டீன்’ என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்  மூலம் தான் , காலை உணவு ரூ.3-க்கும், மதியம் மற்றும் இரவு உணவு தலா ரூ. 5-க்கும் என மொத்தம் 3 வேளையும் ரூ.13-க்கு வழங்கப்பட உள்ளது . 

தொடக்கத்தில், மாநிலம்  முழுவதும் 14 மாநகராட்சி பகுதிகளில் அன்னபூர்ணா கேன்டீன் தொடங்கப்படும்  என்றும் , முதற்கட்டமாக  லக்னோ, கான்பூர், கோரக்பூர், காசியாபாத் உள்ளிட்ட  நகரங்களில்  தொடங்கப் பட  உள்ளது என்பது  குறிப்பிடதக்கது. 

காலை  வேளை உணவு 

காலையில் டீயுடன், இட்லி, சாம்பார், பருப்பு, பக்கோடா, கச்சோரி ஆகியவையும்,

மதியம் மற்றும்  இரவு  -  6 சப்பாத்திகள், காய்கறி, பருப்பு சால்னா ஆகியவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

இந்த வசதியால்  பொதுமக்கள்  அதிகம்  பயன்பெறுவர்.  வேலைவாய்ப்புகள்  உருவாகும். வறுமை  கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்  வயிராற 3  வேளை உணவு  உண்பர் . ஆதலால் யோகி ஆதித்யாநாத்தின்  பல   திட்டங்கள்  மக்களிடையே   நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது .