அதிரடியாக ரூ 1456 உயர்ந்து ,சவரன் ரூ 24,000 – ஐ தாண்டியது...!! பேரதிர்ச்சியில் பொதுமக்கள் ....!!!

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  இந்திய  பங்கு சந்தையில் கடும்  வீழ்ச்சி   காணபடுகிறது. மேலும்,  தங்கத்தின்  விலை  கிடு கிடு  என  உயர்ந்துள்ளது.

கடந்த  சில தினங்களாக , சற்று  குறைவான விலையில் தங்கம்  விற்பனையானது.  தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை  ஏறுமுகத்தில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என்ற  மோடியின் அறிவிப்பை தொடர்ந்து,  தங்கத்தில்  வில மலை போல் உயர்ந்தது.

இந்நிலையில் இன்றைய காலை  நேர  நிலவரப்படி, தற்போது 22 கேரட்  ஆபரண  தங்கம் ,  கிராமுக்கு 182  ரூபாய்  உயர்ந்து,  3 ஆயிரத்து  60  ரூபாய்க்கும், சவரனுக்கு 1456 ரூபாய் உயர்ந்து, சவரன் 24 ஆயிரத்து  480 ரூபாய்க்கும்  விற்கபடுகிறது.  

அதே சமயத்தில், 24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 31 ஆயிரத்து  660 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி  48 ரூபாய்  10  காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி  44 ஆயிரத்து 960  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது…