இன்று ஒரே நாளில் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரிப்பு !!!

தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக , சற்று குறைவான விலையில் தங்கம் விற்பனை யானது. தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடந்து இன்றைய மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் , கிராம் ஒன்றுக்கு 27 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 902 ரூபாயாகவும், சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 23,216 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 31 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 47 ரூபாய் 50 காசுக்கும் ,

ஒரு கிலோ பார் வெள்ளி 44 ஆயிரத்து 430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.