ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஸ்கிராம் 411 வெளியீட்டு தேதி அதிகராப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கும் டீசர் வீடியோவில் மார்ச் 7 ஆம் தேதி ஸ்கிராம் 411 வெளியிடப்படும் என்பதை சூசகமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர புதிய ஸ்கிராம் 411 மற்றும் டி-சர்ட் மற்றும் கீ செயின் உள்ளிட்டவை விற்பனையகம் வரத்துவங்கி இருக்கின்றன. அந்த வகையில் இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். தோற்றத்தில் புதிய ஸ்கிராம் 411 மாடலில் ஹெட்லைட்டை சுற்றி அலுமினியம் கவுல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹிமாலயன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் லக்கேஜ் ரேக் ஸ்கிராம் 411 மாடலில் வழங்கப்படவில்லை. 

இவை இரண்டும் ஸ்கிராம் 411 மற்றும் ஹிமாலயன் இடையே வித்தியாசப்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன. இத்துடன் ஹிமாலயன் மாடலில் உள்ள ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் ஸ்கிராம் 411 மாடலில் வழங்கப்படுகிறது. எனினும், முன்புறம் உள்ள பெரிய விண்ட்ஸ்கிரீன் ஸ்கிராம் 411 மாடலில் காணப்படவில்லை. இதே விவரங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த ஸ்பை படங்களிலும் இடம்பெற்று இருந்தது. 

புதிய ஸ்கிராம் மாடலில் சற்றே சிறிய முன்புற சக்கரம் வழங்கப்படுகிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200mm ஆக இருக்கிறது. ஸ்கிராம் 411 மாடலிலும் 411சசி, ஏர்/ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மாடல் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர், ஹோண்டா CB350RS மற்றும் ஹஸ்க்வர்னா ஸ்வாட்பிலைன் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.