மாருதி சுசுகி நிறுவனம் 2022 பலேனோ மாடல் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 பலேனோ மாடலை மாருதி சுசுகி அறிமுகம் செய்தது. புதிய 2022 மாருதி சுசுகி பலேனோ மாடல் விலை ரூ. 6.35 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.49 லட்சம் ஆகும். முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாருதி சுசுகி பலேனோ மாடல் அதிகளவு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

இதன் முன்புறம் ரி-டிசைன் செய்யப்பட்டு முன்பை விட மேலும் அழகாக காட்சியளிக்கிறது. இதன் பக்கவாட்டு மற்றும் பின்புற பகுதிகளும் மிக முன்பை விட தற்போது புதிதாக காட்சியளிக்கின்றன. பின்புறம் புதிய பம்ப்பர், அகலமான மற்றும் மெல்லிய கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. கிரில் பகுதியில் குரோம் கார்னிஷ், ஆங்குலர் எல்.இ.டி. ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளன.

கேபின் முழுமையாக மாற்றப்பட்டு 9 இன்ச் அளவில் அட்வான்ஸ்டு ஸ்மார்ட் பிளே ப்ரோ ஸ்டாண்ட் அலோன் டச் ஸ்கிரீன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய இண்டர்ஃபேஸ், கூர்மையான மற்றும் க்ரிஸ்பியான கிராஃபிக்ஸ் உள்ளது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதியுடன் 40 கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் அலெக்சா அசிஸ்டன்ஸ், ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், ARKAMYS டியூயனிங் செய்யப்பட்ட புதிய சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் பல்வேறு இதர வசதிகள் உள்ளன.

புதிய மாருதி சுசுகி பலேனோ மாடலில் 1.2 லிட்டர் VVT மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இவைதவிர 5 ஸ்பீடு AMT யூனிட் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய பலேனோ மாடல் ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ரோஸ், ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.