Rangarajan: 5 லட்சம் கோடி டாலர் குறுகிய ஆசை!இந்தியா வளர்ந்த நாடாக மாற 20 ஆண்டுகள் தேவை:RBIமுன்னாள் கவர்னர்
வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் தேவைப்படும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் தேவைப்படும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஐசிஎப்ஏஐ கல்வி நிறுவனத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் ஆர்பிஐ முன்னாள் கவர்னர் சி ரங்கராஜன் பங்கேற்றார். அப்போதுஅவர் கூறியதாவது:
மனிதர்கள் சாப்பிட உதவாத அரிசிக்கு 5 % ஜிஎஸ்டி வரி: ஏஏஆர் விளக்கம்
இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவதெல்லாம் குறுகியகால ஆசை, இலக்கு. இப்போதும் இந்தியா என்ற நாடு, உலகளவில் நடுத்தர வருமானம் உள்ள தேசமாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தனிநபர் வருவாய் 3,472 டாலர் (ரூ.2.86லட்சம்)மட்டும்தான்.
உயர் நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா இடம் பிடிக்கவே இன்னும் 2 ஆண்டுகள் தேவைப்படும். அதன்பின்புதான் வளர்ந்த நாடுகள் இடத்துக்கே செல்ல முடியும். வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பிடிக்க இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைந்தபட்சம் 13,205(ரூ.10.90 லட்சம்) டாலராக இருக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் இருக்கவேண்டும். இந்தநிலையை அடைவதற்கு இந்தியாவுக்கு இன்னும் 20 ஆண்டுகள் தேவைப்படும்.
NDTV-யிலிருந்து வெளியேறினார் பிரணாய் ராய்,ராதிகா ராய்: பங்குகள் அதானி குழுமத்துக்கு மாற்றம்
உலகப் பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இந்தியா இருக்கிறது, அற்புதமான சாதனைதான். ஆனால், தனிநபர் வருவாய் அடிப்படையில் பார்த்தால் சர்வதேச செலாவணி(ஐஎம்எப்) 197 நாடுகளில் 142 இடத்தில்தான் இந்தியா இருக்கிறது.
ஆதலால், அரசின் கொள்கைகளை வகுக்கும் எம்.பி.க்கள் ஆட்சியாளர்கள் பொருளாதார வளரச்சியை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும், முன்னுரிமைஅ ளிக்கவேண்டும். 5லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் நல்லது என்றாலும் குறுகியகால ஆசை.
நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்ட 9 சதவீதமாக உயர்த்த இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்படும் இன்னும் இ்ந்தியா நடுத்தர வருமானம் கொண்ட நாடாகத்தான் பார்க்கப்படுகிறது.
நாம் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. ஆதலால் நாம் உறுதிய இன்னும வேகமாகச் செல்ல வேண்டும் எனும் அவசியம் இருக்கிறது. கொரோனா தொற்றுக்குப்பின் மற்றும் ரஷ்யா உக்ரைன் போருக்குப் பின், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான தெளிவான திட்டத்தை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
கடன் மோசடி வழக்கு.. சந்தா கோச்சார், கணவர் தீபக் கோச்சாரை தட்டித்தூக்கிய சிபிஐ..!
தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும், பின்னர் 8 முதல் 9 சதவீத வளர்ச்சியுடன் தொடர வேண்டும். கடந்த காலங்களில இதை சாத்தியமாக்கியிருக்கிறோம். 6 முதல் 7ஆண்டுகள் வரைநீட்டித்து காட்டியுள்ளோம்
இவ்வாறு ரங்கராஜன் தெரிவித்தார்