100 சேனல்களுக்கு ரூபாய் 130  மட்டுமே ... டிராய் அதிரடி ...!!!

 

100 சேனல்களுக்கு வாடகையாக மாதம் ரூ.130 வசூலிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதிய வரைவு விலைப்பட்டியல் உத்தரவை டிராய் புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி , எல்லா வீடுகளும் 100 சேனல்களை மாத வாடகையாக ரூ.130-க்கு சேனல் வினியோகஸ்தர்கள் வழங்க வேண்டும் என  தெரிவித்துள்ளது.

அதேபோல், கூடுதலான கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல்களுக்கும் அதிகபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும். சேனல்களை வகைப்படுத்தி அதற்கு ஏற்றாற்போல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று அந்த வரைவு விலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்த ஆலோசனைகளை  வரும் 24  ஆம் தேதிக்குள் வழங்க  வேண்டும் என  டிராய்  தெரிவித்துள்ளது.

இந்த திட்டம்  மிக  விரைவில்  அமலுக்கு  வரும் என  எதிரபார்கபடுகிறது