பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் ட்ரீட்.. இந்தியாவில் விற்பனைக்கு வரும் யமஹாவின் 2 தயாரிப்புகள் - எப்போது?
Yamaha R3 and Yamaha MT-03 : ஜப்பான் நாட்டை தலைமையகமாக கொண்டு கடந்த 1955 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் தங்களுடைய பைக்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் தான் யமஹா. இன்றளவும் யமஹா பைக்களுக்கு இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது.
1970 ஆம் ஆண்டுகளில் இறுதியில் இருந்து இந்தியாவில் தனது பைக் விலை விற்பனையை செய்து வருகிறது யமஹா நிறுவனம். அதிலும் குறிப்பாக யமஹா ஆர்டி 350, யமஹா ஆர்.எக்ஸ் 100, yamaha rx-z, யமஹா YBX, யமஹா லிபரோ, யமஹா க்ரக்ஸ் மற்றும் யமஹா க்ரக்ஸ் ஆர் போன்ற பல யமஹா வாகனங்கள் இந்தியாவிலும், தமிழகத்திலும் பெரிய அளவில் விற்பனை சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யமஹா நிறுவனம் தனது இரு புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஒரு நிகழ்வில் இந்த இரு மாடல் பைக்குகளும் விற்பனைக்கு வரவுள்ளது. அவை யமஹா ஆர் 3 மற்றும் எம்டி-3 பைக்குகள் தான். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
அடுத்த வருடம் நாமதான்.. வாகன சந்தையில் டிவிஎஸ் ஏற்படுத்தப்போகும் புரட்சி.. வேற லெவல்..!
வெளியாகவுள்ள இந்த இரண்டு பைக்குகளிலும் 321cc கொண்ட Parallel Twin Cyliner, Liquid Cooled Engine கொண்டுள்ளது. மேலும் இதன் அதிகபட்ச பவர் 40.4 bhp ஆனது 10.750 rpm-லும், மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யமஹா ஆர் 3 விலை சென்னை எக்ஸ் ஷோரூம் விலையாக 3.5 லட்சமும், அதேபோல யமஹா எம்.டி-3 பைக்கின் விலை சுமார் 3 லட்சம் என்றும் கூறப்படுகிறது. வருகின்ற டிசம்பர் மாதம் 15ம் தேதி இந்த இரு பைக்களும் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், CUB முறைப்படி அவை விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.