வின்காஸ்டின் புதிய VF7 மின்சார SUVயின் சிறப்பம்சங்கள், வகைகள் மற்றும் வண்ண விருப்பங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தியாளரான வின்பாஸ்ட், இந்திய சந்தையில் நுழையவுள்ளது. நிறுவனத்தின் வின்பாஸ்ட் VF7 மின்சார SUVயின் வகைகள், சிறப்பம்சங்கள் மற்றும் வண்ண விருப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு 2025 ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும்.
மூன்று வகைகள்
எர்த், விண்ட், ஸ்கை என மூன்று வகைகளில் VF7 கிடைக்கும். ஒவ்வொரு வகையும் வெவ்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆடம்பரமான உட்புறம்
15 அங்குல தொடுதிரை, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), இரட்டை வண்ண உட்புறம் (மொக்கா பிரவுன் + கருப்பு) போன்ற அம்சங்கள் VF7க்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கின்றன.
சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 360-டிகிரி கேமரா, 8 ஏர்பேக்குகள், ADAS (மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு) போன்ற அம்சங்கள் VF7ஐ பாதுகாப்பானதாக ஆக்குகின்றன.
ஆறு வண்ண விருப்பங்கள்
ஜெட் கருப்பு, வெள்ளி, வெள்ளை, கருஞ்சிவப்பு, சாம்பல், பச்சை என ஆறு வண்ணங்களில் VF7 கிடைக்கிறது. V- வடிவ LED DRL வடிவமைப்பு, கூப்பே போன்ற ஸ்டைலிங் ஆகியவை VF7ஐ தனித்துவமாக்குகின்றன.
இந்தியாவில் அசெம்பிளிங்
தூத்துக்குடியில் உள்ள வின்பாஸ்டின் புதிய தொழிற்சாலையில் VF7 அசெம்பிள் செய்யப்படுகிறது. இது விலையிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கும் பங்களிக்கும்.
போட்டியாளர்கள்
இந்திய சந்தையில், VF7, மஹிந்திரா XUV.e9, BYD Atto 3 போன்றவற்றுடன் போட்டியிடும். ஹூண்டாய் மற்றும் டாடாவின் வரவிருக்கும் EV SUVகளுடனும் இது போட்டியிடும்.
