டொயோட்டா ஹைரைடர் vs மாருதி பிரெஸ்ஸா? அம்சங்கள், விலை, முழு விவரங்கள்...!
மாருதி சுசுகி நிறுவனமும் சில தினங்களுக்கு முன்பு தான் புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக டொயோட்டா நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டது. புது டொயோட்டா கார் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் என அழைக்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் மாருதி பிரெஸ்ஸா மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், டொயோட்டா நிறுவனம் புதிய காரை மாருதி பிரெஸ்ஸாவை விட வித்தியாசமாக உருவாக்கி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனமும் சில தினங்களுக்கு முன்பு தான் புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்கள் இடையே என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
டிசைன் விவரங்கள்:
அடிப்படையில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மற்றும் பிரெஸ்ஸா மாடல்கள் ஒரே மாதிரி தான் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், ஹைரைடர் மாடல் பிரம்மாண்ட தோற்றம் கொண்டு இருக்கிறது. இதில் உள்ள கிரில் மற்றும் ஹெட்லேம்ப் யூனிட்கள் காருக்கு அசத்தல் தோற்றத்தை வழங்கி உள்ளன.
இந்த காரில் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இவை ஹூண்டாய் கிரெட்டா மாடலில் வழங்கப்பட்ட யூனிட்கள் ஆகும். இந்த காரின் பின்புறம் பிரெஸ்ஸா போன்று காட்சி அளிக்கிறது. எனினும், இவற்றை கண்டறிவது சற்றே சவாலானதாக உள்ளது. 2022 பிரெஸ்ஸா மாடலில் பாக்சி டிசைன், அதிகளவு பாடி கிளாடிங் கொண்டு இருக்கிறது.
இண்டீரியர்:
அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் இண்டீரியர் பிரெஸ்ஸா மாடலுன் ஒப்பிடும் போது பிரீமியம் அனுபவம் வழங்குகிறது. இரு கார்களிலும் பெரும்பாலான அம்சங்கள் ஒரே மாதிரி வழங்கப்பட்டு உள்ளது. எனினும், சில அம்சங்கள் ஹைரைடர் மாடலில் அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்குகின்றன. அம்சங்களை பொருத்தவரை டொயோட்டா ஹைரைடர் மாடல் பெரிய பட்டியலையே வழங்குகிறது.
இதில் பானரோமிக் சன்ரூப், வெண்டிலேடெட் சீட்கள், டிரைவ் மோட்கள், 360 டிகிரி கேமரா, ஆல் வீல் டிரைவ், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஹைரைடர் மாடலில் ஆறு ஏர்பேக், ESP, TC, ஹில் ஹோல்டு, ஹில் டிசெண்ட், TPMS மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பிரெஸ்ஸா மாடலில் டூயல் டோன் பிளாக் மற்றும் பிரவுன் டேஷ்போர்டு டிசைன் கொண்டிருக்கிறது. பல்வேறு ஸ்விட்ச்கியர், ஸ்டீரிங் வீல்கள், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள், இன்போடெயின்மெண்ட் சாப்ட்வேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், ரியர் ஏ.சி. வெண்ட்கள், வாய்ஸ் கமாண்ட், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் உள்ளன.
என்ஜின் விவரங்கள்:
டொயோட்டா ஹைரைடர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மட்டும் இன்றி 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் விலையை இதுவரை அறிவிக்கவில்லை. 2022 பிரெஸ்ஸா மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டாப் எணஅட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 96 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.