Asianet News TamilAsianet News Tamil

2022 இந்தியா பைக் வீக்கில் டாப் 5 இடங்களை பிடித்த பைக்குகள்... புகைப்படம் மற்றும் விவரம் உள்ளே!!

2022 இந்தியா பைக் வீக்கில் காட்சிபடுத்தப்பட்ட பைக்குகளில் டாப் 5 இடங்களை பிடித்த பைக்குகள் குறித்த விவரத்தை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். 

top 5 motorcycles in india bike week 2022
Author
First Published Dec 11, 2022, 10:26 PM IST

2022 இந்தியா பைக் வீக்கில் காட்சிபடுத்தப்பட்ட பைக்குகளில் டாப் 5 இடங்களை பிடித்த பைக்குகள் குறித்த விவரத்தை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இந்தியா பைக் வீக் வாகன கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில் 2022-க்கான கண்காட்சி சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பைக் ஓட்டிகள் கலந்துக் கொண்டனர். கடந்த டிச.2, 3 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் உலகின் முன்னணி பைக் நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் புதுமுக வாகனங்களைக் காட்சிப்படுத்தினர். அந்த வகையில் இந்திய பைக் வீக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பைக்குகளில் டாப் 5 இடங்களை Himalayan 822, BMW S 1000 RR, KTM 1290 Super Duke R, KTM 890 Adventure R, Harley Davidson Nightster ஆகிய பைக்குகள் பிடித்துள்ளன. 

top 5 motorcycles in india bike week 2022

Himalayan 822: 

Himalayan 822 தமிழக நிறுவனமான ராயல் என்பீல்டு தயாரிக்கிறது. ஆட்டோலாக் டிசைன் மற்றும் ஆட்டோ என்ஜினா எனும் இரு நிறுவனங்கள் இணைந்து பழைய Himalayan பைக்கை மாடிஃபை செய்து அதனை கண்காட்சியில் காட்சிப்படுத்தின. மாடிஃபிகேஷன் கீழ் ஹிமாலயன் பைக்கில் 822 சிசி பாரல்லல் ட்வின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 411 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மதிப்பு ரூ.13 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

top 5 motorcycles in india bike week 2022

BMW S 1000 RR:

BMW S 1000 RR பைக் அதிக பவர்ஃபுல் மாடலாக BMW நிறுவனம் உருவாக்கியுள்ளது. 210 எச்பி திறன் கொண்ட இந்த பைக்கின் எடை 197 கிலோவாக உள்ளது. 

top 5 motorcycles in india bike week 2022

KTM 1290 Super Duke R:

இந்த பைக் 1,301 சிசி, 177 bhp பவர் என்ஜினை கொண்ட இந்த பைக் 140 Nm டார்க் விசையை  கொண்டுள்ளது. இந்த பைக் மாடல் தற்போது உலகளவில் விற்பனையில் உள்ளது. மேலும் இந்த பைக் இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. 

top 5 motorcycles in india bike week 2022

KTM 890 Adventure R:

இந்தியாவில் அட்வென்சர் ரக பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக KTM 890 Adventure R பைக் 889 சிசி என்ஜினுடன் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த வாகனம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

top 5 motorcycles in india bike week 2022

Harley Davidson Nightster: 

Harley Davidson நிறுவனம் போதிய அளவு வரவேற்பு இல்லாத காரணத்தினால் அண்மையில் சந்தையை விட்டு வெளியேறியது. நேரடி வர்த்தகத்தை நிறுத்திய நிலையில் நிறுவனம் ஹீரோ உடன் இணைந்து இந்திய இருசக்கர வாகன சந்தையில் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் இந்தியா பைக் வீக்கில் காட்சிப்படுத்தியுள்ள இந்த Harley Davidson Nightster பைக் 975 சிசி என்ஜினையும் அதிகபட்சமாக 89 எச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக் ரூ.14.99 லட்சம் முதல் ரூ.15.13 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios