Asianet News TamilAsianet News Tamil

பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பர்க்மேன் ஸ்டிரீட் EX ஸ்கூட்டி… இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சுசுகி நிறுவனம்!!

பைக் உற்பத்தி நிறுவனமான சுசுகி இந்திய சந்தையில் புதிய ஸ்கூட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Suzuki Burgman Street EX Launched in India
Author
First Published Dec 7, 2022, 6:35 PM IST

பைக் உற்பத்தி நிறுவனமான சுசுகி இந்திய சந்தையில் புதிய ஸ்கூட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த சுசுகி நிறுவனம் பர்க்மேன் ஸ்டிரீட் EX மேக்சி என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டியின் எக்ஸ்-ஷோரூம் விலை 1 லட்சத்து 12 ஆயிரத்து 300 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டி தான் கூட்டர் சீரிசின் டாப் எண்ட் மாடல் என்றும் கூறப்படுகிறது. சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX ஸ்கூட்டி, 124சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜினுடன் 8.5 ஹெச்பி பவர், 10.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: பணமதிப்பிழப்பு ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்: மத்திய அரசு,ஆர்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேலும் இது ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் வசதியுடன், எரிபொருள் பயன்பாடு மற்றும் காற்று மாசை குறைக்கும் திறனையும் கொண்டுள்ளது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்டர் சிஸ்டமும் இதில் உள்ளது. இதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசலில் பொது என்ஜின் ஆஃப் ஆன பின், திராட்டிலை மெதுவாக திருகினாலே என்ஜின் மீண்டும் ஆன் ஆகும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அகலமான சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 12 இன்ச் வீல், 100/80 செக்‌ஷன் டயரை இந்த ஸ்கூட்டி கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: RBI எபெக்ட்! கரடியின் பிடியில் பங்குச்சந்தை! தொடர் சரிவில் சென்செக்ஸ், நிப்டி

அத்துடன் பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடல் ஸ்கூட்டியில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சுசுகி ரைடு கனெக்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும் உள்ளது. இதன் மூலம் வாகன ஒட்டி தங்களின் போன்களை ஸ்கூட்டருடன் இணைத்துக் கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இன்கமிங் அழைப்புகள், எல்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட் என ஏராளமான விவரங்களை பார்த்துக்கொள்ள முடியும். இவ்வாறு வானக ஓட்டிகளுக்கு ஏதுவாக பல்வேறு வசதிகள் இந்த ஸ்கூட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios