இந்த பிரீமியம் செடான் எப்படி இருக்கு..? உலக மார்க்கெட்டில் அறிமுகமான Skoda Superb - விலை மற்றும் ஸ்பெக்ஸ் இதோ!
Skoda Superb Premium Sedan : செக் குடியரசு நாட்டை தலைமையமாக கொண்டு கடந்த 1925ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தான் ஸ்கோடா. மேலும் இந்திய சந்தையில் கடந்த 2001ம் ஆண்டு முதல் தனது கார்களை விற்பனை செய்து வருகின்றது.
ஸ்கோடா, அதன் Octavia என்ற காரை தான் முதன்முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்கோடா நிறுவனம் தனது புதிய சூப்பர்ப் பிரீமியம் செடானை சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளது, மேலும் இது இந்திய சந்தையிலும் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
முற்றிலும் புதிய 4th Gen வசதிகளுடன், ஸ்கோடா மீண்டும் வடிவமைப்பு, இருக்கை வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் உலகளவில் செடான் மற்றும் எஸ்டேட் பாடி ஸ்டைலில் வழங்கப்படும், இருப்பினும் இந்தியாவில் ஸ்கோடா செடான் பாடி ஸ்டைலை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இந்த விலையில் இப்படியொரு வசதிகளா..
இதன் வடிவமைப்பைப் பொறுத்தவரை, புதிய ஸ்கோடா சூப்பர்ப் சில மாற்றங்களைத் தவிர முந்தைய தலைமுறையைப் போலவே காட்சி அளிக்கிறது என்றே கூறலாம். இது நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பெரிய இன்டேக்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்களால் சூழப்பட்ட பட்டர்ஃபிளை கிரில்லைக் கொண்டுள்ளது.
இரு பக்கங்களிலும், புதிய சூப்பர்ப் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களுடன் பல கூர்மையான மடிப்புகளை கொண்டுள்ளது இதன் சிறப்பு அம்சமாக உள்ளது. பின்புறத்தில், இது கூர்மையான மடிப்புகளுடன் கூடிய நேர்த்தியான ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்களைக் கொண்டுள்ளது.
உள்ளே உள்ள அம்சங்களை பார்க்கும்போது, புதிய சூப்பர்ப் புதிதாக வடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு அமைப்பைப் பெறுகிறது. மேலும் பெரிய ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீழே சிறிய ரோட்டரி டயல்களுடன் சிறிய திரை உட்பொதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெரிய மாற்றம் என்னவென்றால், மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களைப் போலவே ஸ்டீயரிங் கியர் செலக்டர் அமைக்கப்பட்டுள்ளது தான்.
அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய கவலை இல்லை.. ஜாய் இ-பைக் வுல்ஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு..
உலக மார்க்கெட்டில் இந்த கார் அறிமுகமாகியிருந்தாலும், இந்திய சந்தையில் வருகின்ற 2024ம் ஆண்டு தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 34 லட்சம் ரூபாய்க்கு இந்த கார் விற்பனையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D