Simple Dot One EV: ஓலாவின் கொட்டத்தை அடக்கும் சிம்பிள்! ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
டெல்லியைச் சேர்ந்த சிம்பிள் எனர்ஜி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, சிம்பிள் டாட் ஒன் என்ற மலிவு விலை ஸ்கூட்டரை டிசம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. வளர்ந்து வரும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் முந்தைய சிம்பிள் ஒன் ஸ்கூட்டரைத் தொடர்ந்து சிம்பிள் டாட் ஒன் அறிமுகமாக உள்ளது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டரை மின்சார வாகனங்களை அனைவரும் வாங்கக்கூடிய நிலையை உருவாக்கும் நோக்கில் வெளியிட உள்ளது. நாடு முழுவதும் கிடைக்கும் வகையில் அதன் விநியோகத்தையும் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மலிவு விலையில் கிடைக்கும் சிம்பிள் டாட் ஒன் தரத்தில் சமரசம் செய்யாமல் சிறப்பான செயல்திறனுடன் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் வரவுள்ளதால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஓடிடி ரசிகர்களுக்கு சூப்பர் சான்ஸ்! ஏர்டெல், ஜியா போட்டியால் ஃப்ரீயா கிடைக்கும் நெட்பிளிக்ஸ்!
3.7 kWh பேட்டரி கொண்ட டாட் ஒன் மின்சார ஸ்கூட்டர், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிமீ முதல் 160 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டயர்கள் ஆன்-ரோடு வரம்பை மேம்படுத்துகின்றன. இதன் மூலம் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த செயல்திறனும் மேலும் சிறப்பாக இருக்கும் என்று சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவிக்கிறது.
இருக்கையின் கீழ் சுமார் 30 லிட்டர் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் டச் ஸ்கிரீன் இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுபற்றி சிம்பிள் எனர்ஜியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார் கூறுகையில், “எங்கள் சிம்பிள் ஒன் சீரிஸில் மலிவு விலையில் சிம்பிள் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாங்கள் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறோம். சிம்பிள் எனர்ஜியின் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாக இருக்கும். அதிநவீன அம்சங்களுடன் நேர்த்தியான வடிவமைப்பை வழங்குகிறோம். எங்களின் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்கிறார்.
சைலென்ட்டா ரிலீஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A15 ஸ்மார்ட்போன்! அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D