எலக்ட்ரிக் ராயல் என்ஃபீல்டு பைக்.. உறுதியான ரிலீஸ்.. எப்போன்னு தெரியுமா ? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

தற்போது எல்லா இடங்களிலும் எலக்ட்ரிக் வகை வாகனங்களின் ஆதிக்கம் அதிகமாகிக்கொண்டே வருகின்றது. முன்பெல்லாம் மேலைநாடுகளில் மட்டுமே புழக்கத்தில் இருந்து இரு மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் தற்போது இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. 

Royal Enfield to launch Electric Bikes soon in upcoming years

அந்த வகையில் பிரபல ராயல் என்ஃபீல்டு பைக்கின் முதல் மின்சார பைக், தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.வருகின்ற 2026ம் ஆண்டு இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சித்தார்த்த லால் பேசும்போது, 2024ம் ஆண்டு முதல் காலாண்டுக்கான நிகழ்வின்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே மின்சார பைக்குகளுக்கு தேவையான, சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய காலாண்டில் நடந்த ஒரு நிகழ்வின்போது, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மின்சார வாகனங்களை தயாரிக்க ஆர்வம் கட்டிவருதாக வெளியான தகவல் தற்போது உண்மையாகியுள்ளது. 

Electric Scooters : ரூ.28 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. அட்டகாசமான அம்சங்கள் - முழு விபரம் இதோ !!

கூடுதலாக, RE நிறுவனம் அதன் மின்சார வாகன (EV) முயற்சிகளை விரைவுபடுத்த, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஸ்டார்க் ஃபியூச்சருடன் இணைந்து செயலாற்றி வருகின்றது. 

மேலும் இந்த மின்சார வாகனம் குறித்து பேசிய நிறுவனர், "இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டு பைக்கின் எலக்ட்ரிக் வடிவம் சந்தையை அடையும் என்றும், இதற்காக எங்களது குழு தீவிரமாக பணியாற்றி வருவதாகவும்" அவர் கூறினார். "இதற்கான மாதிரிகள் தயாராகி உள்ளதால், விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எக்கசக்க தள்ளுபடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆகஸ்ட் 15 வரை ஓலா வழங்கும் சூப்பர் சலுகை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios