புது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை இவ்ளோதானா.. அப்போ எல்லாரும் வாங்கிடுவாங்க போலயே.!!
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் பைக்கை வாங்க இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
ராயல் என்ஃபீல்டு புல்லட் என்றாலே தனி மவுசு இப்போது வரை இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் நிறுவனங்கள் வந்தாலும் ராயல் என்ஃபீல்டு இன்று வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அதிகளவு விற்பனையாகி கொண்டிருக்கிறது. நீங்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது இங்கே பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 வகைகள் :
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இரண்டு வேரியண்ட்டில் வருகிறது. ஒன்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகும்.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 நிறம் :
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஆனது ஏராளமான வண்ணங்களுடன் வருகிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வகைக்கு ஆறு நிறங்களும், டூயல் சேனல் ஏபிஎஸ்ஸுக்கு ஒன்பது நிறங்களும் வருகிறது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை :
கீழே நிறம் மற்றும் மாறுபாடு வாரியான கிளாசிக் 350 விலைகள் (எக்ஸ்-ஷோரூம்) கொடுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு பார்க்கலாம்.
Redditch Red சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,90,092
Redditch Gray சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,90,092
Redditch Sage Green சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,90,092
ஹல்சியோன் பிளாக் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,92,890
ஹல்சியோன் கிரீன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,92,890
ஹல்சியோன் கிரே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,92,890
இதையும் படிங்க..Hyundai : கார் வாங்க போறீங்களா.? விலை குறையுது தெரியுமா?.. உங்களுக்கான குட் நியூஸ்.. முழு விபரம் உள்ளே
ஹல்சியோன் பிளாக் டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,98,971
ஹல்சியோன் கிரீன் டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,98,971
ஹல்சியோன் கிரே டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ 1,98,971
சிக்னல்கள் டெசர்ட் சாண்ட் டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ 2,10,385
சிக்னல்கள் மார்ஷ் கிரே டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ 2,10,385
டார்க் ஸ்டெல்த் பிளாக் டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ.2,17,588
டார்க் கன்மெட்டல் கிரே டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ.2,17,588
குரோம் ரெட் டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ.2,21,297
குரோம் வெண்கல இரட்டை சேனல் - ரூ 2,21,297
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மைலேஜ் :
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ஏர்-0யில் கூல்டு, இஎஃப்ஐ எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது 20.2 பிஎச்பி அதிகபட்ச ஆற்றலையும் 27 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 5-ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மைலேஜ் லிட்டருக்கு 36.2 கிமீ ஆகும்.
இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்