MG நிறுவனத்தின் Comet EV மாடல் கார்.. வெளியாகும் புதிய Gamer Edition - ஆனா ரேட் கொஞ்சம் அதிகம்!

லண்டன் நகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக கார் விற்பனையில் புகழ்பெற்று விளங்கும் நிறுவனம் தான் எம் ஜி. இவர்கள், எலக்ட்ரிக் மற்றும் இயல்பு ரக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். 

MG released new Comet EV Gamer Edition here is what it costs

என்னதான் பல ஆண்டு காலமாக, பல நாடுகளில் தங்கள் கிளைகளை பரப்பி, பல லட்சம் கார்களை விற்பனை செய்து வந்தாலும், இந்தியாவிற்கு எம்ஜி நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டில் தான் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலில் எஸ்யூவி மற்றும் செடான் வகை கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது mg நிறுவனம். இதனுடைய தலைமையகம் தற்போது ஹரியானாவில் உள்ள குருகிராம் பகுதியில் உள்ளது.

எம்ஜி ஆஸ்டர், எம் ஜி ஹெக்டர், எம் ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் ஆகிய நான்கு பிரீமியம் வகை கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் எம்ஜி நிறுவனம், கடந்த 2022ம் ஆண்டு எலக்ட்ரிக் கார்களையும் அறிமுகம் செய்தது. 

எக்கசக்க தள்ளுபடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆகஸ்ட் 15 வரை ஓலா வழங்கும் சூப்பர் சலுகை!

அதன் பிறகு எலக்ட்ரிக் கார்களில் சிறுரக கார்களையும் விற்பனை செய்து வருகிறது அந்த நிறுவனம். குறிப்பாக அந்நிறுவனம் வெளியிட்ட Comet EV என்கின்ற அந்த எலக்ட்ரிக் கார் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது தமிழகத்தில் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு அந்த கார் விற்பனையாகி வரும் நிலையில் எம்ஜி நிறுவனம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 

அதாவது அதே Comet EV காரில் ஒரு கேமர் எடிசன் மாடல் காரை தற்போது வெளியிட்டுள்ளது. இயல்பாக வெளியாகும் Comet EV கார்களைவிட, சில சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த வாகனம் சுமார் 65 ஆயிரம் ரூபாய் இயல்பை விட கூடுதலாக விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Car Discount : புதிய கார் வாங்க போறீங்களா? ரூ. 74 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்த ஹோண்டா - முழு விபரம் இதோ !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios