இந்தியாவில் புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ காம்பாக்ட் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் EMI மற்றும் பிற முக்கிய அம்சங்கள் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹூண்டாய் தனது காம்பாக்ட் எஸ்யூவி மாடலான வென்யூவின் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு வேரியன்ட்களுடன் வந்துள்ள இந்த மாதலின் அடிப்படை வேரியன்ட் HX2க்கு ஹூண்டாய் ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளது. வென்யூ இப்போது HX2 முதல் HX10 வரை 10 வேரியன்ட்களிலும், N லைன் பதிப்புகளிலும் கிடைக்கிறது.

ஹூண்டாய் வென்யூ விலை

வென்யூவின் அடிப்படை HX2 மாடல் விலை ரூ.7.90 லட்சம் என்றால், அதில் ரூ.1.90 லட்சம் முன்பணம் செலுத்தி, ரூ.6 லட்சம் கடன் பெறலாம். 8% வட்டியில் 3 ஆண்டுகளுக்கு EMI ரூ.18,802 ஆகும். அதே வட்டியில் 4 ஆண்டுகளுக்கு ரூ.14,648, 5 ஆண்டுகளுக்கு ரூ.12,166, 6 ஆண்டுகளுக்கு ரூ.10,520, மற்றும் 7 ஆண்டுகளுக்கு ரூ.9,352 ஆக இருக்கும். வட்டி விகிதம் சிறிது மாறினால் EMIயும் மாறும். உதாரணமாக 9% வட்டியில் 5 ஆண்டுகளுக்கான EMI ரூ.12,455 ஆகும், 10% வட்டியில் ரூ.12,748 வரை உயரும். 

வென்யூ அம்சங்கள்

இதனால், வாங்கும் முன் வட்டி விகிதத்தையும் காலத்தையும் ஒப்பிட்டு தேர்வு செய்வது நிதி ரீதியாக சாலச் சிறந்தது. புதிய வென்யூவில் மூன்று அடுக்கு டாஷ்போர்டு வடிவமைப்பு உள்ளது. மைய ஈசி வென்ட்கள் கிடைமட்டமாகவும், பக்கவாட்டு வென்ட்கள் செங்குத்தாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மைய கன்சோலில் ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், டிரைவ் மோடு ரோட்டரி டயல், மற்றும் எலக்ட்ரானிக் பார்கிங் பிரேக் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் ஸ்டீயரிங் வீல் “H” வடிவில் டி-கட் மாடல் ஆகும்.

வெளிப்புற வடிவமைப்பு

வென்யூவின் வெளிப்புற வடிவமைப்பு இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய டார்க் குரோம் ரேடியேட்டர் கிரில், குவாட் பீம் எல்இடி ஹெட்லாம்புகள், மற்றும் இணைக்கப்பட்ட டெயில் லைட்கள் காருக்கு நவீன தோற்றத்தை வழங்குகின்றன. புதிய 16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் பிரிட்ஜ் ரூஃப் ரெயில்களும் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய வண்ண விருப்பங்களில் மிஸ்டிக் சஃபையர், ஹேசல் ப்ளூ, டிராகன் ரெட், மற்றும் டூயல் டோன் ஹேசல் ப்ளூ வித் அபிஸ் பிளாக் ரூஃப் ஆகியவை அடங்கும.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்

புதிய வென்யூவில் லெவல் 2 ADAS, முன் பார்க்கிங் சென்சார், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், மற்றும் டூயல் டிஸ்ப்ளேக்கள் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு மற்றும் வசதி இரண்டையும் ஒரே நேரத்தில் வழங்கும் வகையில் உள்ளது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்

புதிய வென்யூவில் 1.2 லிட்டர் பெட்ரோல் (83 HP), 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (120 HP), மற்றும் 1.5 லிட்டர் டீசல் (116 ஹெச்பி) இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மாடல்கள் 5-ஸ்பீடு மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றன, மேலும் டர்போ வேரியண்ட் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக்கிலும் கிடைக்கிறது.

டீசல் மாடலுக்காக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் விருப்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. N Line மாடல் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மட்டுமே கொண்டுள்ளது. புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ, ஆடம்பரமும் ஆற்றலும் இணைந்த ஒரு மாதலாக இந்திய சந்தையில் மீண்டும் வலுவாக தனது இடத்தை நிலைநிறுத்தியுள்ளது.