ஹார்லி டேவிட்சன் X440 இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
ஹார்லி டேவிட்சன் X440 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.2.29 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இளைஞர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது ஹார்லி டேவிட்சன் பைக்குகள். அந்த வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹார்லி டேவிட்சன் X440 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியின் முதல் ஹார்லி டேவிட்சன் X440 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.29 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹார்லி டேவிட்சன் X440 பைக்கானது Denim, Vivid மற்றும் S ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. Denim வகை ரூ. 2.29 லட்சம், Vivid வகை ரூ.2.49 லட்சம், S வகை ரூ.2.69 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் X440 பைக்கின் அடிப்படை மாடல், ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் வகை டயர்களுடன் வருகிறது. மிட்-வேரியண்ட் மெட்டாலிக் திக் ரெட் மற்றும் மெட்டாலிக் டார்க் சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது. மிட்-வேரியண்ட்டில் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் உள்ளன. டாப் எண்ட் மாடல் மேட் பிளாக் வண்ணத்தில் கிடைக்கிறது. அதில், டயமண்ட்-கட் அலாய் வீல்கள், 3D பேட்ஜிங், புளூடூத் வசதி, LED இண்டிகேட்டர்கள் உள்ளன.
Harley-Davidson X440 இன் அனைத்து வகைகளிலும் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ரெட்ரோ ஸ்டைல் இன்டிகேட்டர்கள், ஹார்லி டேவிட்சன் பிரான்டிங் செய்யப்பட்டு சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஃபிலாட் ஹேன்டில்பார், யூ.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வசதிகள் உள்ளன. ஹார்லி டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட air/oil-cooled சிங்கிள்-சிலிண்டர், 440சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 27 bhp ஆற்றலையும், அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 38 NM விசையையும் வழங்குகிறது. இது 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டூ வீலர் வாங்க போறீங்களா.? அதிரடியாக விலை அதிகரித்த இருசக்கர வாகனங்கள் - முழு விபரம்
சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, X440 முன்பக்கத்தில் 43mm தலைகீழான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் இரட்டை ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களையும் கொண்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டம் முன்புறத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க்குடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ ஆகவும், முன் மற்றும் பின் டயர்கள் முறையே 100/90-18 மற்றும் 140/70-17 அளவுகளிலும் உள்ளன.
Hero MotoCorp மற்றும் Harley Davidson ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஹார்லி டேவிட்சன் X440 வெளிவந்துள்ளது. முந்தைய ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் மாடல்களைப் போல் ஹரியானாவின் பாவாலில் தயாரிக்கப்படாமல், ஹார்லி டேவிட்சன் X440 ரோட்ஸ்டர் மாடல், ஹீரோ மோட்டோகார்ப் தயாரிப்பு நிலையத்தில் தயாரிக்கப்படவுள்ளது.
ஹார்லி டேவிட்சன் X440 ரோட்ஸ்டர் மாடலின் அறிமுகமானது, இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் ஹார்லி-டேவிட்சனின் விரிவாக்கத் திட்டங்களில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. 150சிசி முதல் 450சிசி வரையிலான பைக்குகளை வழங்குவதை இலக்காக கொண்டு, பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோ மோட்டார்ஸ் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.