விற்கப்படும் பழைய காரின் மீது 18% வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? யாருக்கு வரி பொருந்தும்?
பழைய வாகன விற்பனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அனைத்து வகை வாகனங்களுக்கும் பொருந்துமா? ஜிஎஸ்டி பதிவு செய்தவர்கள் மற்றும் செய்யாதவர்களுக்கு விதிமுறைகள் எப்படி மாறுபடும்?
புதிய வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பது அறிந்த ஒன்று. பழைய வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி இருக்கிறது. இது சமீபத்தில் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது எவ்வாறு கணக்கிடப்படும் என்று பார்க்கலாம்.
சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் விற்கப்படும் பழைய வாகனங்கள் மீது 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வரி விதிப்பு அனைத்து வாகனகளுக்கும் பொருந்துமா என்று பார்க்கலாம். 1200 CC பெட்ரோல் வாகனங்கள், 1500CC டீசல் வாகனங்கள் மற்றும் அனைத்து எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தும். ஆனால், ஜிஎஸ்டி பதிவு செய்து இருப்பவர்கள், பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு பழைய வாகனங்களை விற்கும்போது. இந்த ஜிஎஸ்டி விதி பொருந்துமா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.
EV கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: சொளையா ரூ.3 லட்சம் வரை தள்ளுடி
உள்ளீட்டு வரி கிரெடிட்:
இது புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு இல்லை. ஏனெனில் இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு முன்பு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. GST பதிவு செய்யப்பட்ட வணிகத்தின் பெயரில் கார் வாங்கப்பட்டாலும், பெரும்பாலான வணிகங்கள் உள்ளீட்டு வரிக் கிரெடிட் கோர முடியாது. உள்ளீட்டு வரி கிரெடிட் (ITC) விதியின் இந்த உரிமைகோரலுக்கு ஒரே விதிவிலக்கு கார் ஷோரூம் டீலர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்கள் போன்ற பிற குறிப்பிடப்பட்ட நபர்கள் கார் வாங்கும்போது உள்ளீட்டு வரி கிரெடிட் பெறலாம்.
விற்பனை விலை, வாங்கும் விலை (வருமான வரிச் சட்டத்தின்படி தேய்மானத்தை குறைத்த பிறகு) மதிப்பு எதிர்மறையாக இருந்தால், ஜிஎஸ்டி எதுவும் செலுத்தப்பட வேண்டியதில்லை. மேலே குறிப்பிட்டது, காரை விற்பதற்கு பதிவு செய்து இருந்தால், உள்ளீட்டு வரி செலுத்த வேண்டியதில்லை.
லிட்டருக்கு 80 கிமீ அசால்ட்டா ஓடும்: அதிக மைலேஜ் தரும் பட்ஜெட் பைக்குகள்
பழைய கார் மீது யாருக்கு 18% ஜிஎஸ்டி பொருந்தும்?
ஜிஎஸ்டி பதிவு செய்யாத நபர், அதாவது தனிப்பட்ட நபர் தனது காரை மற்றொருவருக்கு விற்கும்போது 18% புதிய ஜிஎஸ்டி வரி பொருந்தாது. டீலருக்கே விற்றாலும் இந்த வரி விதிப்பு பொருந்தாது. இது டீசல், பெட்ரோல், எலக்ட்ரிக் கார் என அனைத்துக்கும் பொருந்தும்.
மார்ஜின் திட்டம் என்றால் என்ன?
பயன்படுத்திய கார்களை வாங்கும் மற்றும் விற்கும் டீலர்கள், கார்களை வாங்குவதற்கு உள்ளீட்டு வரி கிரெடிட் பெறாவிட்டால், ஜிஎஸ்டியின் கீழ் வழங்கப்படும் ‘மார்ஜின் திட்டத்தில்’ பயன் பெறலாம். இந்த மார்ஜின் திட்டத்தின் கீழ் விற்கும் விலை, வாங்கும் விலைக்கு இடையில் இருக்கும் விலைக்கு மட்டும் ஜிஎஸ்டியை டீலர்கள் கட்டும்படி இருக்கும். ஒரே வேலை டீலரின் மார்ஜின் விலை நெகடிவ்வாக இருந்தால், அது நஷ்டம் என்று எடுத்துக் கொள்ளப்படும். இங்கே டீலர் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டியதில்லை.
What is inventory led model?
ஒருவர் வாகனங்கள் வாங்கி விற்கும் ''கார்ஸ் 24'' போன்ற வணிக தளங்களின் மூலம் வாங்கும்போது, விற்பவர் ஜிஎஸ்டி பதிவு செய்து இருந்தால், ஜிஎஸ்டி வரி பொருந்தும். அதேபோல், வாகனத்தை இந்த தளங்களின் மூலம் விற்பவர் ஜிஎஸ்டி பதிவு செய்யவில்லை என்றால் வரி பொருந்தாது. சந்தையில் இரண்டு மாடல்கள் உள்ளன. ஒன்று inventory led model and marketplace model. இதில் inventory led model பின்பற்றும் கார் விற்கும் வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி விதிக்கும். ஆனால், marketplace model-ஐ பின்பற்றும் கார் விற்கும் வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியை விதிப்பதில்லை.
எந்த பழைய காருக்கு ஜிஎஸ்டி இல்லை:
தற்போதும் 1200 CCக்கு குறைவாக இருக்கும் பழைய பெட்ரோல் வாகனங்களை 12% ஜிஎஸ்டி விலையில் வாங்கலாம். உதாரணத்திற்கு கார் டீலர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் காரை, பத்து லட்சம் ரூபாய்க்கு வாங்கி, 11 லட்சத்துக்கு விற்றால், இங்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதாவது ரூ. 18000 வரி விதிக்கப்படும்.